Home தமிழ்நாடு மளமளவென குறைந்த தங்கம் விலை-ரூ.320 குறைந்து விற்பனை – Kumudam

மளமளவென குறைந்த தங்கம் விலை-ரூ.320 குறைந்து விற்பனை – Kumudam

0



சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து  ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று (நவ.12ம் தேதி) சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து  ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க லாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2080 குறைந்தது. பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி அன்று (அக்.31) ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளது. குறிப்பாக நேற்று ரூ.1080 குறைந்து விற்கப்பட்ட நிலையில், இன்று 22 கேரட்  ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து  ரூ.7,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version