Home சினிமா டிமான்டி காலனி 2 – புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு – Kumudam

டிமான்டி காலனி 2 – புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு – Kumudam

0



அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் டிமான்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அருள்நிதிக்கு விமர்சன ரீதியாக நல்ல கம்பேக் கொடுத்திருந்தது. இதனையடுத்து டிமான்டி காலனி 2ம் பாகத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்திலும் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, அருடன் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

முதல் பாகத்தை போல டிமான்டி காலனி 2ம் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் 6ம் தேதி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன சம்பவம், அதனை அருள்நிதியும் ப்ரியா பவானி சங்கரும் தடுத்தார்களா என்பது தான் டிமான்டி காலனி 2ம் பாகத்தின் கதை. முதல் நாளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற டிமான்டி காலனி 2, அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற தொடங்கியது. 

டிமான்டி காலனி 2 முதல் நாளில் 3.5 கோடி முதல் 5 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 4 கோடி, மூன்றாவது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூலித்ததுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டதால், ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் டிமான்டி காலனி 2 வசூல் 5 கோடியை நெருங்கியுள்ளது. அதன்படி மொத்தமாக இதுவரை 15 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மேலும் படிக்க: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்

இந்த படம் ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள் மற்றும் பயமுறுத்தும் அம்சங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version