Home சினிமா முற்போக்கா பேசி முத்தம் கொடுத்தாரு முத்துக்குமரன் ! வஹிதா அக்தர் சொன்ன அதிர்ச்சி தகவல் !...

முற்போக்கா பேசி முத்தம் கொடுத்தாரு முத்துக்குமரன் ! வஹிதா அக்தர் சொன்ன அதிர்ச்சி தகவல் ! – Kumudam

0


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற முத்துக்குமரன் தொடர்பாக சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. வஹிதா அக்தர் என்ற சமூக வலைதளப் பிரபலம், முத்துக்குமரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், முத்துக்குமரனுடன் தான் இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய மற்றொரு வீடியோவையும் வஹிதா அக்தர் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பேச்சுப் போட்டிகளில் இருந்து பிக் பாஸ் வரை…

முத்துக்குமரன், பேச்சுப் போட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியதன் மூலம் கவனம் பெற்றவர். சமூக பிரச்னைகள் மற்றும் முற்போக்கான கருத்துகள் தொடர்பாக அவர் தொடர்ந்து பேசி வந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் வீட்டில் தனது பேச்சுத்திறன் மற்றும் அணுகுமுறையால் ரசிகர்களிடம் கவனம் பெற்ற அவர், இறுதியில் அந்த சீசனின் டைட்டிலையும் கைப்பற்றினார்.

டைட்டிலை வென்ற பிறகும் சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

திடீரென எழுந்த சர்ச்சை

இந்நிலையில், வஹிதா அக்தர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் முத்துக்குமரனுடனான பழக்கம் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

வீடியோவின் ஒரு கட்டத்தில் தனது தற்கொலை முயற்சிக்கு முத்துக்குமரன் காரணம் எனக் கூறியதும், பின்னர் தனது நிலைக்கு தானே காரணம் என்றும் அவர் பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்ட வருகின்றன.

முத்துக்குமரனுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து …

வஹிதா அக்தர் வெளியிட்ட பதிவுகளில், முத்துக்குமரனை தான் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், தன்னுடைய முந்தைய வாழ்க்கை மற்றும் குடும்ப சூழ்நிலை குறித்து அவருக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஒரு குழந்தை இருப்பதாகவும், தனது திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் முத்துக்குமரனுக்கு தெரியும் என அவர் கூறியதாக தெரிகிறது.

மேலும், தான் கடினமான மனநிலையில் இருந்த காலகட்டத்தில் முத்துக்குமரன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், அந்த நேரத்தில் அவர் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும் வஹிதா அக்தர் கூறியுள்ளார்.

காதல் மற்றும் திருமணம் குறித்து குற்றச்சாட்டு

முத்துக்குமரன் தன்னிடம் காதலாக பேசியும், திருமணம் செய்து கொள்வதாக கூறியதும் வஹிதா அக்தர் தனது பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக அவரது வார்த்தைகளை தான் நம்பியதாகவும், இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது விருப்பமின்றி எதையும் செய்ய மாட்டேன் என முத்துக்குமரன் கூறியதாகவும், திருமணம் தொடர்பாக அவர் அளித்த உறுதிமொழிகளை நம்பியதாகவும் வஹிதா அக்தர் தனது வீடியோவில் கூறியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

வீடியோவிலேயே மாத்திரைகள் சாப்பிட்ட வஹிதா

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக வஹிதா அக்தர் கூறியதாக தெரிகிறது.

மேலும், தனது வாழ்க்கை தொடர்பாக விரக்தியுடன் பேசியபடி அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து, இணையத்தில் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.

புதிய வீடியோவால் மீண்டும் கவனம் பெற்ற விவகாரம்

இந்த சர்ச்சைக்கு மத்தியில், வஹிதா அக்தர் வெளியிட்டமற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் முத்துக்குமரனும் வஹிதா அக்தரும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு காட்சியில் முத்துக்குமரன், வஹிதா அக்தரின் கன்னத்தை பிடித்தபடி அவரைப் பற்றி அன்புடன் பேசும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், “இந்த மூஞ்ச எனக்கு புடிச்சிருக்கு” என்று கூறுவது பதிவாகிய நிலையில், இந்த வீடியோ தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.

“என்னை ஏமாற்றிவிட்டீர்கள்” – வஹிதா அக்தரின் பதிவு

புதிய வீடியோவுடன் வஹிதா அக்தர் வெளியிட்டதாக கூறப்படும் பதிவில், தன்னை நம்ப வைத்து பின்னர் ஏமாற்றிவிட்டதாக முத்துக்குமரனை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவுடன் வஹிதா பேகம் வெளியிட்ட பதிவில்,

” அப்படின்னா நீ என்கிட்டே விளையாடிட்ட ரைட்! என்னய ஏமாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அதவிட்டுட்டு வீடியோஸையும் நிறுத்த சொல்லி நீ கெஞ்சாத.

என்கிட்ட பேசிட்டு, நம்ப வச்சீங்களே… அப்போ இருந்த அந்த தைரியத்துல கொஞ்சமாச்சும் யூஸ் பண்ணி, முடிஞ்சா Truth-ஐ பேசிக்கோங்க. இல்லனா உங்களுக்கு என்ன வேணுமோ அதை பண்ணுங்க.

But எனக்கு கால் பண்ணாதீங்க. திரும்பவும் என்னை எதுவும் புஷ் பண்ணாதீங்க. நீங்க சொன்னது எல்லாமே விளையாட்டுக்குத்தான்னு இப்போ புரிஞ்சிடுச்சு

பெரிய தேங்க்ஸ்… எதுக்குத்தான் திரும்பி என்னை காப்பாத்துனீங்களோ தெரியல… என்னால முடியல.

எல்லாமே பொய்யா போச்சு.”

என்று கூறியுள்ளார்.

டைட்டில் வின்னரிலிருந்து ட்ரோல் விவாதம் வரை…

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் டைட்டில் வென்றதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற முத்துக்குமரன், தற்போது இந்த தனிப்பட்ட விவகாரம் காரணமாக சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தை எதிர்கொண்டு வருகிறார்.

வஹிதா அக்தரின் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வைரலானதைத் தொடர்ந்து, சிலர் முத்துக்குமரனிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

உண்மை என்ன? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வஹிதா அக்தரின் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து முத்துக்குமரன் தரப்பில் இருந்து மேலும் விரிவான விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version