Home சினிமா கடுமையான காய்ச்சல்… ‘தக் லைஃப்’ படத்திற்காக உழைத்து ஓய்ந்து ஓடாக தேயும் சிம்பு! – Kumudam

கடுமையான காய்ச்சல்… ‘தக் லைஃப்’ படத்திற்காக உழைத்து ஓய்ந்து ஓடாக தேயும் சிம்பு! – Kumudam

0


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, அபிராமி, த்ரிஷா, அஷோக் செல்வன், நாசர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பகுதி சென்னையிலும் மற்றொரு பகுதி செர்பியாவிலும் நடைபெறுவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் போடப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரங்கராய சக்திவேல் நாயக்கராக நடிக்கும் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த ஜோடியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். ‘விடிவி’ படத்தில் ‘கேட் அண்ட் ரேட்’ போன்ற கதாபாத்திரங்களில் நடித்த இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது. இதுபோன்ற ஆழமான ரோல், தக் லைஃப் படத்திலும் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

முதலில் கமலின் வளர்ப்பு மகனாக நடிக்க துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சில காரணங்களுக்காக அவர் படத்திலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. இதன் பின்புதான் சிம்பு இப்படத்தில் ஒப்பந்தமாகினார். ‘STR 48’ படத்திற்காக வளர்த்த தலைமுடியுடனேயே இந்த படத்தில் நடித்திருந்தாலும் பொருத்தமாகவே உள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு சில நாட்களாக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து வந்த சிம்பு, கடும் காய்ச்சலிலும் நடித்துக் கொடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் 50வது படம “ஏஆர்எம்”

இந்த ஆண்டு டிசம்பரில் தக் லைஃப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கை மணிரத்னம் விரைவுப்படுத்தி வருகிறார். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version