தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை தனிப்பட்ட முறையில் எவ்வளவு கேவலமாக பேசினார். அவர் வாய்க்கொழுப்பில் தேவையில்லாமல் அவதூறாக மோசமாக பேசியிருக்கிறார்.
கருணாநிதி காரணத்திலிருந்து இப்படித்தான் பேசுவார்கள், குடும்பத்தை பற்றி பேசுவது தான் கருணாநிதி காலத்திலிருந்து திமுகவின் வழக்கம். அவருடைய முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டு காவல்துறை கைது செய்தது வழக்கமாக நடப்பது தான். இது சாதாரண நடைமுறை. ஆனால் அவர் பேசியதற்கு வழக்குபோடாமல் இருக்க முடியாது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் திமுகவினர் இதே போல் தான் பேசுகிறார்கள். முன்பு திமுகவினர் அதிமுகவினரை பேசுவார்கள் இப்படித்தான் நடைபெற்றது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் செட்டில்மெண்ட் செய்ய முடியாது, ஊழல் தவறு செய்தால் வழக்கு, தேவையில்லாமல் அவதூறு பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். ஊழலுக்கு செட்டில்மெண்ட் செய்ய முடியாது. இங்கு எங்கும் எதிலும் ஊழல் கிடையாது. வேறு வழியே இல்லாமல் தேவையில்லாமல் பேசுகிறார்கள். அவர் ராஜினாமா செய்து விட்டு சேர சொன்னதாக சொல்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடியையும், கேவலமான நபரையும் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். கேவலமான ரவுடித்தனமான தென் தமிழகத்தில் அனைத்து விரோதமான ரவுடித்தனமும் செய்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். கட்டப்பஞ்சாயத்து செய்பவர். 20 ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ரவுடித்தனம் செய்தவர். அனிதா ராதாகிருஷ்ணன் அவரைப் போன்ற நபர்கள் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். அதை திசை திருப்புகிறாராம், அவ்வளவு பெரிய அறிவாளியாம் அவர். அவர் தவமிருந்து முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். அவர்கள் அனைவரின் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஊழல் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குகள் நடைபெறும். பழைய காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் வீர வசனம் பேசிவிட்டு வழக்கு பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொள்வார்கள். இது அந்த மாதிரியான ஆட்சி இல்லை. யாராக இருந்தாலும் தவறு செய்தால் சட்டபூர்வமான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அவர் குதிரை பேரம் செய்ததை ஆதாரத்துடன் எங்கள் எம்எல்ஏ மூலம் சொல்லி இருக்கிறோம். அதுபோல எங்கள் பக்கம் நாங்கள் யார் மூலமாக அவரை அழைத்தால் சொல்லுங்கள்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்களிடம் எம்எல்ஏ எண்கள் உள்ளது. இன்று தேர்தல் நடைபெற்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் மக்களுக்குத்தான் பயந்து நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலை பார்க்கிறோம். யாருக்கும் பயப்படவில்லை. ஸ்டாலின் உட்பட யாருக்கும் பயப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் தலைவர் பல அழுத்தத்தை தாண்டி எங்கும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஆட்கள் இன்னும் திமுகவில் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் செய்த தவறுக்கு வழக்கு பதிவு செய்யப்படும். அமைச்சராக இருந்தபோதே அவர்கள் கட்சியில் கைது செய்யப்பட்டபோது பேண்டில் யூரின் போனார்கள். தான் இப்போது காரில் ஏறும் போது அவரை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்க சொன்னது யார் என ஆதாரத்துடன் கொடுத்தால் நாங்கள் கேட்கிறோம். செய்த தவறுக்கான வழக்குகள் தான் அது எந்த விதத்திலும் பழி வாங்கும் எண்ணம் இல்லை. எங்கள் தலைவருக்கு இவர் ஒரு பொருட்டே இல்லை. மக்கள் பணத்தை கொள்ளையடித்து குடும்பத்தை வளர்த்தவர்கள். இன்று மக்களுக்காக பத்து முதல் 12 நேரம் மக்களுக்காக வேலை செய்யும் முதல்வர் மக்களின் உண்மையான முதல்வருக்கு இவர் ஒரு பொருட்டே இல்லை.
மாற்றுக் கட்சியில் இருந்து சேர வருபவர்கள் சேருவார்கள். ஆனால் யாரிடமும் சமரசம் கிடையாது. இன்னும் கட்சியில் சேர நினைத்தவர்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறோம். கட்சியில் சேர வேண்டாம் என்று தடுத்திருக்கிறோம். அனிதா ராதாகிருஷ்ணன் வந்த பிறகு தென் தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் நடைபெற்றுள்ளது திருநெல்வேலி, தூத்துக்குடியில் கேளுங்கள். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து படுகொலை ரவுடித்தனங்கள் பல நடைபெற்றுள்ளது” என்று தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் அமைச்சர் நிர்மல் குமார்.
