Home தமிழ்நாடு ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு – Kumudam

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு – Kumudam

0



சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட என்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 13வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக அமலாக்கதுறை நவம்பர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணை தள்ளிவைத்தார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version