back to top
17.5 C
London
Tuesday, June 30, 2026
No menu items!
Homeசினிமா'இது நம்ம ஆளு' உருவான கதை... பசியால் பிறந்த பாக்யராஜின் சூப்பர் ஹிட் திரைக்கதை! -...

‘இது நம்ம ஆளு’ உருவான கதை… பசியால் பிறந்த பாக்யராஜின் சூப்பர் ஹிட் திரைக்கதை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ப்போ தேனாம்பேட்டை சிக்னல் கிட்ட ஒரு பழைய பில்டிங்… டோர் நம்பர் 92C’தான் பில்டிங் பேரு. அங்க தங்கியிருந்தவங்க நெறையப் பேரு சினிமாவுக்குன்னே வந்தவங்க.அந்த டேமேஜான பில்டிங்ல எட்டு, பத்து ரூம் இருந்தது. ஒரு கிணறு இருந்தது. குளிக்கிறதுக்கு ரெண்டு பாத்ரூம், டாய்லெட் போறதுக்கு ரெண்டு பாத்ரூம்!
அங்கதான் மேல் போர்ஷன்ல சங்கிலி முருகன் தங்கியிருல்ந்தாரு. ‘தாலாட்டு படம் பண்ண டைரக்டர் (கோகுலகிருஷ்ணா) பாலகிருஷ்ணன் இருந்தாரு. அங்க இளையராஜாவும் கொஞ்ச நாள் இருந்திருக்காராம்.

கவுண்டமணி, செந்தில், கல்லாப் பெட்டி சிங்காரம், ‘தூறல் நின்னு போச்சு’ல எனக்கு மாப்பிள்ளைத் தோழனா வருவானே சிவராமன்… இவங்கள்லாம் அங்க வருவாங்க. நான் அப்ப தாடி விட்டு, கோவை நண்பர் கோபாலகிருஷ்ணன் ரூம்லயே ‘நான் உண்டு, என் வேலை உண்டுன்னு உட்கார்ந் திட்டிருப்பேன். அதைப் பார்த்துட்டு, ‘யாருய்யா ஒரு ஆளு அந்த ரூம்ல உக்காந்து எந்நேரமும் எழுத்தாணியும் கையுமா இருக்கா.. யாரு. திருவள்ளுவரா?ன்னு கேட்சு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க இப்படித் தமாஷா பேசிட்டிருக்கும்போது, சாதாரணமா சொன்ன ரெண்டு விஷயங்கள் சினிமாவுக்கு எனக்குக் கைகொடுத்தது.

பசி வந்தா மனுஷன் என்ன வேணா பண்ணுவானில்லே. பசி பொறுக்க முடியல ஒருத்தனுக்கு. அவன் வெளியூர்லருந்து வந்து இங்க வேலை தேடி, வேலை கிடைக்கல. சோறு கிடைக்காம மயங்கிச் செத்துப் போயிருவோமோன்னு அவன் நெனைக்கும்போது எவனோ ஒருத்தன், ‘பார்த்தா செகப்பா இருக்கியே, தஞ்சாவூரா?”ன்னு கேட்க, இவன் ‘ஆமா’ன்னு தலையாட்டியிருக்கான்.

அசப்புல ஐயர் பையன் மாதிரி இருக்குறே! ‘பிராமணாள் கபே’ இங்க இருக்குது. அங்க வேலைக்கு ஆள் வேணும்னு போர்டு எழுதி வெச்சிருக்காங்க. நீ ஐயர்தான்னு சொல்லி ஒரு பூணூல் போட்டுக்கிட்டுப் போ! எப்படியாவது ஒரு பத்து நாள் வேலை பார்த்தீன்னா, அதுக்குள்ள வேற வேலை தேடிக்கலாம். மயங்கிக் கியங்கி கீழ விழுந்திராதேன்னு சொன்னவுடனே, இவன் அதே மாதிரி ஒரு பூணூல் போட்டுக்கிட்டுப் போனான்.

அவங்களும் இவன் ஐயர் பையன்னு வேலைக்கு எடுத்திருக்காங்க. காலைல அடுத்த நாள் அவனோட நடவடிக்கைகள்ல ஏதோ சந்தேகம் வந்து, ‘இங்க வாடா’ன்னு கூப்பிட்டு, ஐயருக்குண்டான ஒரு பேஸிக் மந்திரம் சொல்லச் சொன்னாங்க. நான் ‘ஸ்வாகா, ஸ்வாகா’ன்னு முழிச்சேனில்லே… அந்த மாதிரி அவன் மந்திரம் சொல்லத் தெரியாம முழிக்க, ‘பளார்’னு ஒரு அறை விட்டு, எதுக்குடா பூணூல் போட்டிருக்கே? சுழட்டுடா!ன்னு சொல்லிட்டு, எதுக்குடா வந்தேன்னு கேட்டிருக்காங்க.
இவன் ‘பசிக்காக வந்தேன்’னு சொல்ல, ரெண்டு ரூவா கைல கொடுத்துச் சாப்பிடச் சொல்லி, ‘இங்க நாங்க பிராமணாளை வெச்சுதான் வேலை பார்ப்போம். நீ ஏதோ தெரியாம வந்திட்டே இனிமே பூணூலைப் போட்டுக்கிட்டு இப்படிப் பண்ணாதே! வேறெங்காவது வேலை தேடிப் போரீன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க.

 அப்பல்லாம் சாப்பாடு நாலணாங்கிறதால, அந்த ரெண்டு ரூபா ரெண்டு நாளைக்குத் தாங்கும்! எனக்கு டக்னு ஸ்ட்ரைக்காச்சு! ‘பசிக்காக ஒருத்தன் ஐயர் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டுப் போனான். இவன் போன எடம் ஓட்டல்ங்கிறதால அடுத்த செகண்டே வந்திட்டான். இது வேற மாதிரி எடமா இருந்தா எப்படி இருக்கும்?னு யோசிச்சேன். நம்ம சோமயாஜுலு மாதிரி சாஸ்திர சம்பிரதாயத்துல ஊறிப்போன ஒரு சாஸ்திரிகள்.. அவர்கிட்டே நம்மாளு போக, (அட அது நான்தாங்க!) பி.ஏ. படிச்சிட்டு, மந்திரம் தெரியலன்னாக் இவன் ‘பசிக்காக வந்தேன்’னு சொல்ல, ரெண்டு ரூவா கைல கொடுத்துச் சாப்பிடச் சொல்லி, ‘இங்க நாங்க பிராமணாளை வெச்சுதான் வேலை பார்ப்போம். நீ ஏதோ தெரியாம வந்திட்டே! இனிமே பூணூலைப் போட்டுக்கிட்டு இப்படிப் பண்ணாதே! வேறெங்காவது வேலை தேடிப் போ!’ன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க.

கூடப் பரவாயில்ல, கெளரவம் பார்க்காம புரோகிதம் பண்ண வந்திருக்கானேன்னு நினைச்சு, யதார்த்தமா ஒரு வேலை போட்டுக் கொடுப்பாரு. அங்க அவர் பொண்ணுக்கு அவன் மேல லவ்வு. ஆனா, அவன் உண்மையான பிராமணன் இல்லே, பார்பர் அப்படின்னா என்னாகும்னு அந்த இன்ஸிடெண்ட் ஒண்ணுதான் டக்குனு அப்ப ஸ்ட்ரைக்காச்சு! அத வெச்சிட்டுதான் ‘இது நம்ம ஆளு’ பண்ணோம்!

திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ், 11 ஆண்டுகளுக்கு முன் குமுதம் வார இதழில் ‘படிச்சா புடிச்சர்லாம்’ என்னும் தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here