back to top
20.9 C
London
Sunday, June 28, 2026
No menu items!
Homeதமிழ்நாடுவகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை-அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் - Kumudam

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை-அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தினார். இதில் ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார்.

இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில், ஆசிரியை கொலை செய்யப்பட்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “ தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here