back to top
20.5 C
London
Tuesday, October 6, 2026
No menu items!
Homeசினிமாமெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்...PBS குரலில் மயிலிறகுப் பாட்டு! - Kumudam

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்…PBS குரலில் மயிலிறகுப் பாட்டு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

ஒரு படத்துக்குள் இருக்கிற பாடல்கள், அந்தக் கதையின் கனத்தை வீரியம் குறையாமல் சொல்ல உதவும். அப்படி உதவும் என்றுதான் அந்தக் காலத்தில், 22 ரீல் படங்களுக்கு 28 பாடல்களெல்லாம் இருந்திருக்கின்றன. டைட்டிலுக்கு ஒரு பாடல், டைட்டில் முடிந்ததும் ஒரு பாடல் என்றெல்லாம் ஐம்பதுகளில் இருக்கும்.

இப்போதைய காலத்தில், பாடல் ஏன் என்பதும் தெரியவில்லை. கதையின் கனம் சொல்லுகிற பாடலாகவும் இல்லை. ஆனால், மெல்லிசை மன்னரின் இசையில் உருவான இந்தப் பாட்டு சொல்லும் சேதி, நம்மைத் தாலாட்டும். நமக்கு ஆறுதல் சொல்லும் பாட்டாகவும் நாம் நம் வாழ்க்கைத்துணைக்கு ஆறுதல்படுத்துகிற பாட்டாகவும் அமைந்திருக்கும். ‘கொடிமலர்’ என்ற படம்… 1966ம் ஆண்டு வந்த படத்தை எத்தனைபேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஆகச்சிறந்த படம். புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில்,முத்துராமன், விஜயகுமாரி நடித்த படம்!

‘கல்யாணபரிசு’தான் ஸ்ரீதர் இயக்கிய முதல் படம். இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகம்தான் அவருக்கு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணி. கதை சொல்லும் விதம், காட்சிப்படுத்துவதற்கு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான வின்செண்ட், கூடவே அசகாயசூரரான சித்ராலயா கோபு, எல்லாவற்றுக்கும் மேலாக மெல்லிசைமன்னர்… இந்தக் கூட்டணியுடன் கோதாவில் இறங்கி அதகளம் பண்ணினார் ஸ்ரீதர். மயிரிழையில் ‘கொடிமலர்’ தவறியது. ஆனால் பாட்டு… இன்றைக்கும் வேர்விட்டு, கிளைபரப்பி, நிழல் தந்துகொண்டிருக்கிறது. அப்படியான இளைப்பாறல் பாட்டுதான் ‘மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்!’

நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடந்து முதலிரவு. தோட்டத்தின் பக்கம் வருகிறார்கள். அங்கே சின்னதான குட்டை. அதில் பூத்திருக்கிறது அல்லி. நாயகி அந்த அல்லியைப் பார்க்கிறாள். ‘இந்தப் பூ வேணுமா உனக்கு?’ என்கிறான். ஆமாம் என்பதுபோல் தலையசைக்கிறாள். ஆமாம்… பதிலை வார்த்தைகளால் சொல்லமுடியாது அவளால்! பேச்சுத்திறன் இழந்தவள். சைகை மூலமே தன் உணர்வுகளைச் சொல்லுபவள்!

அந்த அல்லியை எடுக்கப் பிரயத்தனப்படும் வேளையில், அவனுக்கு கைகொடுத்து பற்றிக்கொள்கிறாள் நாயகி. அப்போதுதான்…
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும் என்கிறார் கண்ணதாசன். அதை தன் குரலால், குழைத்துக் குழைத்து இதம் தருகிறார் பிபி.ஸ்ரீநிவாஸ். பேச இயலாத மனைவியிடம், ‘உன் மெளனப் பார்வை பாட்டு, உன் நாணம் எனும் சைகையே வார்த்தை’ என்று இதமூட்டுகிறான் கணவன்.

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்….
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்….
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்ம்ம்….
என்று முல்லை இதழ் என்கிறார் கண்ணதாசன். தேனாறு என்கிறார்.

தங்கநகை போல் என்னையும் சூடிக்கொள் என்கிறார். காதல் ரசனைக்குள் தெய்வாம்சத்தையும் தெய்வாம்சத்துக்குள் காதல் ரசத்தையும் கண்ணதாசனால் மட்டுமே முடியும்! மெல்லிசை மன்னர் என்று பொருத்தமாகத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ பாடல்கள் உதாரணம். அதில் ஒருதுளி… இந்தப் பாடல்!

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் – பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்ம்ம்ம்..

‘நீ என் பக்கமிருந்தால் எனக்கு மொழியே தேவையில்லை. அதுமட்டுமா? உன் சிறிய முகத்தில், பல மொழிகள் பாடமே கற்றுக்கொள்ளும்’ என்கிற வரிகளில் ‘பேச்சாவது ஒன்னாவது’ என்று சொல்வோம்தானே! பாடலில் புல்லாங்குழல் நம்மைச் சொக்கவைக்கும். சிதார் இடையிடையே வந்து கிறங்கடிக்கும். வயலின்கள் குழுவாகச் சேர்ந்து கொண்டு நம்மைச் சூழ்ந்து வருடிக்கொடுக்கும். காலக்கவிஞன் கண்ணதாசன் வரிகள் ஒவ்வொன்றும் ‘ம்’ என்று முடியும். உடனே மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, ஸ்ரீநிவாஸை அழைத்து, ம் ம் ம் ம் ம்… மெளனமே பார்வையால் என்று பாடச் சொல்லியிருப்பார் போல..! அவரும் ‘ம் ம் ம் ம்’ சொல்லும் அழகில் லயிக்கவைத்துவிடுவார். நாமும் ‘ம்ம்ம்ம்ம்ம்’ என்று இன்றுவரைக்கும் இந்தப் பாடலைப் பாடி மனதை இதமாக்கிக் கொண்டே இருக்கிறோம்!

நீங்கள் ‘ஃபுல் வால்யூம்’ ஏற்றினாலும் பிபி.ஸ்ரீநிவாஸிடம் உங்கள் பாச்சா பலிக்காது. அவரின் ஹஸ்கி குரல், நம் ஹெட்போனுக்குள் நுழைந்து, ‘தூங்குடா கண்ணு தூங்குடா கண்ணு’ என்று மெளனமாக, ‘மெளனமே பார்வையால்…’ என்று பாடிப்பாடித் தூங்கவைக்கும். நமக்கு எத்தனை வயதானாலும் நாம் குழந்தையாகிவிடுவோம். பிபி ஸ்ரீநிவாஸ் அம்மாவாகிவிடுவார்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here