Home அரசியல் தவெக நிர்வாகிகள் சர்ச்சை… பள்ளிகளில் தொடரும் அத்துமீறல்! – Kumudam

தவெக நிர்வாகிகள் சர்ச்சை… பள்ளிகளில் தொடரும் அத்துமீறல்! – Kumudam

0



ஆளும்கட்சி பொறுப்பாளர்களுக்கு எந்தளவுக்கு அதிகாரம் உள்ளது, பொதுவெளியில் அவர்கள் எப்படி நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுக்க வேண்டுமோ என்று யோசிக்கும் அளவிற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுதான் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் தலைவலி!

காஞ்சிபுரம் மாவட்டம், தளவராம்பூண்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு தன் ஆதரவாளர்களுடன் சென்ற தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் மாணவர்களிடம் முதல்வர் விஜய்யின் போட்டோவைக் காட்டி ‘இவர் யார்? என்று கேட்டு போட்டோவை பள்ளி அறையில் மாட்டியிருக்கின்றார். இதை அவரின் ஆதரவாளர்கள் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதையடுத்து ராஜேஷிடமிருந்து கட்சிப் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், திருவாரூர் தெற்கு மாவட்ட தவெக நிர்வாகி அகிலனின் அதிரடி செயல்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவர் தன் ஆதரவாளர்களுடன் குன்னலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்று ‘ஆய்வுக்காக வந்துள்ளோம் எனக் கூறி சமையலறை, கழிப்பறை. பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை சுற்றி சுற்றி வந்தார். மேலும் விசாரணை என்ற பெயரில் பள்ளி ஆசிரியையிடம் ஏதோதோ கேள்விகள் கேட்டு அதனை வீடியோவும் எடுத்துள்ளார்.

இதைவிட கொடுமை அகிலன் தன் பிறந்தநாள் விழாவை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதாக சொல்லப்படும் சம்பவம் தான். இதுகுறித்து திருவாரூர் தெற்கு மா.செ பாரதியிடம் கேட்டோம். “வருடா வருடம் தலைவரின் பிறந்தநாளன்று பள்ளிகளுக்கு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். அந்த பள்ளிக்கு என்ன நலத்திட்ட உதவிகள், எவ்வளவு பேருக்கு தேவை எனக் கேட்டு வரச்சொல்லி மாவட்ட துணைச் செயலாளர்  அகிலனை நான் தான் அனுப்பினேன். அவர்களும் சில கோரிக்கைகளை கூறினார்கள். மற்றபடி எதுவும் இல்லை. அதேபோல வேறு எங்கோ பிறந்தநாள் கொண்டாடியதை பள்ளி வளாகத்தில் கொண்டாடியதாக பொய் சொல்லி வருகின்றனர்? என்றார்.

ஆனால், சமூக வலைதளங்களில் உள்ள அந்த விடியோவில் நலத்திட்ட உதவிகள் குறித்த எந்த காட்சியும் இல்லை. அதேநேரத்தில் பாரதியின் விளக்கத்திற்கு மாறாக தவெக நிர்வாகிகள் சிலரே சமுகவலைதளங்களில் தங்களது அதிருப்தியை  தெரிவித்துவருகின்றனர். அவர்களிடம் நாம் பேசினோம். “பள்ளிக்கூடங்களில் தரக்குறைவான செயல்களை தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இதை மாவட்டச் செயலாளரும் கண்டுகொள்வதில்லை. ஏற்கெனவே மாவட்டத்தில் கட்சி பல கோஷ்டிகளாக இருக்கிறது.

கடந்த மே மாதம் திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க கொடியேற்றுவதில் நிர்வாகிகளுக்கிடையே அடிதடி சம்பவம் அரங்கேறி, அந்த வீடியோவும் சமுகவலைதளங்களில் வைரலாகி தவெகவை பலரும் விமர்சித்தனர். இந்த சூழலில்தான் மாவட்ட துணைச் செயலாளர் அகிலன் அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றிருக்கிறார். பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ எதிர் கோஷ்டியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அதுவும் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டுமே ஆய்வுக்காக செல்வார்கள்.

அங்கேதான் இவர்களை யாரும் அதேபோல, மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டார். அப்போது “வாடி.. வாடி… கை படாத சி.டி. என்ற விஜய் நடித்த குத்துப்பாட்டுக்கு அமைச்சர் விஸ்வநாதனே குத்தாட்டம் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தவொரு அரசுப் பதவியும் வகிக்காத தவெக நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் நிகழ்வுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், அதன் பெருமையை மீட்டெடுக்கும் மாபெரும் கடமை தற்போதைய கல்வி அமைச்சருக்கு காத்திருக்கிறது.

அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் பள்ளிக்கூடங்களில் அதிகமாகி, தமிழக கல்வித்துறையை மேலும் தரம் தாழ்த்துகின்றன. இதுபோன்ற செயல்களுக்கு எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற தைரியம். இதே ஆய்வை தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என சென்று செய்வதுதானே. கட்சியின் மாநிலத் தலைமை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

இதற்கிடையே, கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத் ஆகியோர் கலந்துகொண்டுவிட்டு மேடையை விட்டு கீழே இறங்குவதற்குள் தவெகளின் ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சிப் பாடலை ஒலிக்கச் செய்தது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன், ‘நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த அத்துமீறல் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவும், ‘அரசுப் பள்ளிகளில் தவெகவினரின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கின்றன’ என விமர்சனம் செய்துள்ளார்.
பள்ளிக்கூடங்களையும் தியேட்டர்கள் ஆக்கிவிட்டார்களே!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version