Home சினிமா தனுஷுடன் மீண்டும் இணைகிறார் திருச்சிற்றம்பலம் ‘ஷோபனா’ – Kumudam

தனுஷுடன் மீண்டும் இணைகிறார் திருச்சிற்றம்பலம் ‘ஷோபனா’ – Kumudam

0


 தமிழ்த் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார் தனுஷ். தனது அபாரமான நடிப்பாற்றலால் தேசிய விருதினை வென்ற இவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து 3 படங்களை இயக்கியுள்ளார். ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகிய தனுஷ் அடுத்ததாக தனது நடிப்பில் 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதற்கடுத்ததாக குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதற்கு இடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 

தனுஷின் அக்கா மகனான பவிஷ் கதாநாயகனாக இத்திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. 

தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், அசோக் செல்வன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது அது உறுதியாகியிருக்கிறது. தேனியில் தனுஷ் – நித்யா மேனன் இணைந்த போர்ஷன்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாப்பாத்திரத்தில் அபாரமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் நித்யா மேனன். தனுஷுக்கும் நித்யா மேனனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இந்த ஜோடி திரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதே கூட்டணி மீண்டும் இணைவது நிச்சயம் இட்லி கடை படத்துக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version