Home சினிமா அரசியலுக்கு வரப் போறீங்களா?…. ஆர்.ஜே. பாலாஜியின் அதிரடியான பதில் ! – Kumudam

அரசியலுக்கு வரப் போறீங்களா?…. ஆர்.ஜே. பாலாஜியின் அதிரடியான பதில் ! – Kumudam

0



அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, அங்கு மாணவர்களுடனும் ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் நடித்த ‘எல்.கே.ஜி.’ திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா?” என்று மேடையை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி சிரித்துக்கொண்டே தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார். அவரது பதில், அரசியலுக்கு அவர் வருவாரா என்ற கேள்விகளுக்கும், ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணையாளர் என திரைத்துறையிலும், விளையாட்டுத் துறையிலும் தனது திறமையை பல்வேறு விதங்களில் நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. சமீபத்தில் அவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் சூர்யாவுக்கும் சிறப்பான கம்பேக் படமாக அமைந்ததாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டது. மேலும், இப்படம் ரூ.300 கோடி வசூலைக் குவித்து திரையுலகில் கவனம் பெற்றதாகவும் கூறப்பட்டது.

தற்போது ஆர்.ஜே. பாலாஜி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல், சிறப்பான கதை ஒன்றை எழுதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், “நீங்கள் நடித்த ‘எல்.கே.ஜி.’ திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, “ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருக்கும் போது, நானும் அந்தப் பெரிய கூட்டத்தில் போய் இணைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என பொதுமக்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார். அவரது இந்தப் பதில் அங்கு இருந்த ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தனது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு தெளிவாக பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, “அரசியலுக்கு நான் வர வேண்டுமா? தேவையே இல்லை! நோ, ரிஜெக்டட்! நான் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு அந்த ஆசையும் இல்லை. அது நடக்கவும் நடக்காது” என்று மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் கூறினார்.

இதன் மூலம், எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ஆர்.ஜே. பாலாஜி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது இந்தப் பதில், அவர் அரசியலுக்கு வருவார் என அவ்வப்போது வெளியாகி வந்த தகவல்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி கதை எழுதி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘எல்.கே.ஜி.’. அரசியல் களத்தை மையமாக வைத்து உருவான இப்படம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள், தேர்தல் உத்திகள் மற்றும் அரசியல் சூழல்களை நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் திரையில் வெளிப்படுத்தியது. நிஜ அரசியலில் பயன்படுத்தப்படும் பல்வேறு தேர்தல் உத்திகளை நகைச்சுவையுடன் திரையில் காட்டியதால், ‘எல்.கே.ஜி.’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்த ஆர்.ஜே. பாலாஜிக்கு நிஜ வாழ்க்கையிலும் அரசியல் ஆசை இருக்குமோ என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது.

திரைப்படத்தில் அரசியல் களத்தை மையமாக வைத்து நடித்ததாலும், அரசியல் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்து வந்ததாலும், ஆர்.ஜே. பாலாஜி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு சில ரசிகர்களிடம் இருந்து வந்த அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.ஜே. பாலாஜியின், “நோ! ரிஜெக்டட்!” என்று திட்டவட்டமாகக் கூறியதுடன், தான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், தனக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால், ‘எல்.கே.ஜி.’ திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்ததால் நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவாரா என்ற ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு தற்போது ஆர்.ஜே. பாலாஜியே நேரடியாக பதில் அளித்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version