back to top
30 C
London
Thursday, June 25, 2026
No menu items!
Homeசினிமாபாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகர் முகேஷ் கைது  - Kumudam

பாலியல் குற்றச்சாட்டில் மலையாள நடிகர் முகேஷ் கைது  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


மலையாளத் திரையுலகில் நிறைய எண்ணிக்கையில் பெண்களுக்கெதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளதை ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது. அந்த அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரையுலக நடிகைகள் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றிப் பரவலாகத் தெரிய வந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்களைத் தடுக்க அனைத்துத் துறைகளிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. திரைத்துறையில் பாலியல் சுரண்டல் உச்சத்தில் இருந்தும் அது பெரிய அளவில் வெளி வராமல் இருந்தது. இநத சூழலில் ஹேமா கமிட்டியின் அறிக்கைதான் அதனை வெளிக்கொண்டு வந்தது. 

அந்த அறிக்கை வெளியானதில் இருந்தே மற்ற மொழித் திரைத்துறைகளிலும் ஹேமா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. அந்த வகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மலையாளத் திரைப்பட நடிகருமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகேஷை கைது செய்வதற்கு முன்பாக, பாலியல் புகார் குறித்து 3 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு முகேஷ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. எர்ணாகுளத்தில் உள்ள மரடு காவல் நிலையத்தில் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முகேஷ் முன்ஜாமீன் கோரி ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட பின் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here