back to top
22.5 C
London
Wednesday, June 24, 2026
No menu items!
Homeசினிமாவெளியானது கேம் சேஞ்சர் அப்டேட் - Kumudam

வெளியானது கேம் சேஞ்சர் அப்டேட் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்துக்குப் பிறகு தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்கிற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிற இத்திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் ராம் சரண் இந்தியா முழுவதும் பெரும் கவனம் பெற்றார். ஆகவே கேம் சேஞ்சர் திரைப்படத்தை பான் இந்தியா படமாகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வி அடைந்தது. எதிர்மறையான விமர்சனங்களை ஷங்கர் எதிர்கொண்டார். 

இந்நிலையில் ராம் சரணை வைத்து இயக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கும் முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரமோ இம்மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர். பாடல்களைத் தொடர்ந்து மிக விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் மாதம் 20ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here