Home சினிமா மக்கள் தலைவா-குமுதம் விமர்சனக் குழு – Kumudam

மக்கள் தலைவா-குமுதம் விமர்சனக் குழு – Kumudam

0


மராஜர் காலத்திற்குப் அரசியல் கட்சிகளும் பிறகு தமிழ்நாட்டில் நல்ல இல்லை, நல்ல தலைவர்களும் இல்லை. மக்களும் முட்டாள் களாகவும், சுயநலவாதிகளாகவும் மாறிவிட்டனர்: இனி ரீல்ஸ் போடுறவன்தான் தலைவன்! இப்படி சத்தியம் பண்ணிச் சொல்கிறார் இயக்குநர் ராம் தேவ் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி, மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க சுயநலவாதியான ரவிமரியாவை எப்படிக் கட்சி தொடங்க வைக்கிறார். நாலு பேருடன் திரிந்துகொண்டிருந்த அவர் பின்னால் எப்படி ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்க்கிறார். அதை வைத்து மற்ற அரசியல் கட்சிகளைத் தன் பணபலத்தால் எப்படி வீழ்த்துகிறார், முடிவில் லாட்டரிக் குலுக்கல் மாதிரி மக்கள் கூட்டத்திலிருந்து இன்னொரு கோமாளியைத் தேர்ந்தெடுத்து.!!

வேலுனை முதல்வராக்கி, மக்களை ப்படி முட்டாளாக்குகிறார் என்பதுதான் கதை பயில்வான் ராதாரவி, ரங்கநாதன், ரவிமரியா, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, பேரரசு என நடித் தவர்கள் அனைவரும் சிறப்பு. ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் பரவாயில்லை. திரைக்கதை வசனம் சுமார். சண்டை கவர்ச்சி நடனம் இல்லாதது ஆறுதல்.

படம் முழுக்கப் பிரசாரம், கூட்டம் விவாதம் எனச் சலிப்பான சமா சாரங்கள். ஒன்றுகூடப் புதிதாகவோ, ரசிக்கும்படியோ இல்லை. உவெக கட்சிக்கு ஓட்டு போட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று அள்ளி விடுவதெல்லாம் நக்கல் என்றாலும் விக்கல்தான் வருகிறது.
‘மக்கள் தலைவா’
வாயால சுட்ட வடை !



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version