back to top
25.6 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகுறைந்த மின்னழுத்தம் அறிவிக்கப்படாத மின்வெட்டு முடங்கிப்போன மும்முனை மின்சாரம்! காயும் பயிர்கள் கதறும் விவசாயிகள் எப்போது...

குறைந்த மின்னழுத்தம் அறிவிக்கப்படாத மின்வெட்டு முடங்கிப்போன மும்முனை மின்சாரம்! காயும் பயிர்கள் கதறும் விவசாயிகள் எப்போது கிடைக்கும் தீர்வு? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இதுகுறித்து டெல்டா விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அனைத்து சிரமங்களையும் தாண்டி குறுவை விவசாயத்தை தொடங்கியுள்ளோம். ளாம்.
ஆனால், மின்மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. போதாததற்கு அடிக்கடி நிலவும் குறைந்த மின்னழுத்தத்தால் மோட்டார்கள் பருத்திச்செடிகளும் காய்ந்துவிட்டன. இயங்குவதே இல்லை. தொடர்ந்து இயக்கினால் மோட்டார் புகைந்து பழுதாகிவிடுகிறது. இதனால் வயல்கள் நீரின்றி வெடித்துப்போயிருக்கின்றன.

கத்தரி, வெண்டை, தக்காளி, முள்ளங்கி என காய்கறி சாகுபடி செய்யவும் போதிய தண்ணீர் இல்லை. விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் நாற்றுகளும் கருகிவிட்டன. இப்படி மின்வாரியம் எங்களுக்கு கொடுக்கும் ஷாக்கையும் மீறி கடைசிக் கட்டமாக டீசல் மோட்டார் கொண்டு பம்புசெட்டை இயக்கினாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதால் அதிலும் நீர் வருவதில்லை” என்றனர் கண்ணீருடன்.

தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை இயற்கை விவசாயியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவருமான ராமலிங்கம், “மும்முனை மின்சாரம் எப்போதாவதுதான் வருகிறது. பகலில் 8 மணி நேரம் இரவில் 8 மணி நேரம் மும்முனை மின்சாரம் இருந்தால்தான் தடையின்றி நீர் பாய்ச்ச முடியும். மழை பெய்தாலாவது ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம். இப்படி நெருக்கடியான நேரங்களில் நீர் தட்டுப்பாட்டைப்போக்க ஆறுகளில் நீர் வரும்போது ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீரைத் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான வழிமுறைகளை செய்வதில்லை.

டெல்டா மாவட்டங்களில் பல ஏரி, குளங்கள் வறண்டுபோய்விட்டன. இந்த ஏரி, குளங்களை நிரப்பும் நீர்வழிப்பாதைகளும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. ஆக்ரமிப்புகளை அகற்றி நீர்வழிப்பாதைகள் மூலம் ஏரி, குளங்களை நிரப்பி நிலத்தடி நீரை சேமிப்பது மட்டுமே இதற்கு முழுத் தீர்வாகும்” என்றார். தமிழக விவசாயிகள் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ‘மின்சாரத்தைப் பொறுத்தவரையில் நீண்டகால திட்டங்கள் நமக்கு வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சிக்கலான காலத்தை சமாளிக்க முடியும். மக்களுடைய மின்சாரப் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. கிராமப் பகுதிகளிலேயே ஏ.சி. இல்லாத வீடுகள் இல்லை. மின் சாதனங்களும் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதற்கேற்ற மின்மாற்றிகளும் அமைக்கப்படுவதில்லை. இதனால்தான் லோ வோல்டேஜ் பிரச்னை ஏற்படுகிறது. அரசு மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு, சோலார் மின் உற்பத்தி குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும்” என்றார்.

இன்னொரு பக்கம் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டுக்களால் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மக்கள் படாத பாடுபடுகின்றனர். அதிலும் இரவுநேர மின்வெட்டால் வியர்வை மற்றும் கொசுக்கடியால் தூக்கம் தொலைத்து, போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். சீர்காழியில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து மக்கள் தீப்பந்தம் ஏந்தியும், தீப்பந்தங்களை மின் கம்பங்களில் கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தின்போதும் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட ஜெனரேட்டரும் இயங்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஷாஜகானோ, ‘தமிழகத்தில் எங்கும் மின்வெட்டே இல்லை. கடும் காற்றால் சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது’ என தமாஷ்செய்திருக்கிறார்.

இதற்கிடையே, தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ‘மின்தடை ஏற்பட்டால் உடனே சரிசெய்து மின் விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும். மின்தடை குறித்த மக்களின் புகார்களுக்கு மரியாதையுடன் பதிலளிக்க வேண்டும்’ என அறிவித்துள்ளார்.

மின்வாரிய உயரதிகாரிகளோ, “கோடைக்காலங்களில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களை சார்ந்திருக்காமல், கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து சதவிகிதம் மின்சாரம் வாங்கப்படுகிறது. 40 இதோடு 32 சதவிகிதம் மத்திய தொகுப்பிலிருந்தும், 28 சதவிகிதம் சொந்த உற்பத்தி நிலையங்களிலிருந்தும் பெறப்படுகிறது. தனியாரிடமிருந்து ஒரு யூனிட் ரூ. 6 முதல் ரூ.9 வரை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என்றார்கள்.
 

தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்ய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரோ, ‘ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த சிலர் வேண்டுமென்றே ஃபியூஸ் கேரியரை பிடுங்கி செயற்கை மின்தடையை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், மின்தடை சதியை தடுக்க 125 ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. என்று கூறியிருக்கிறார். இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியோ, ‘தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஃபியூஸ் கேரியர் திருட்டுப் போகின்றனவா? இதுபோன்ற காரணங்களை தேடாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’ என காட்டமாக பதில் கூறியுள்ளார்.

மக்களின் புழுக்கத்தை அரசுதான் போக்க வேண்டும்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here