Home அரசியல் கடைசி சட்டசபை கூட்டம்: இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல், புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு  – Kumudam

கடைசி சட்டசபை கூட்டம்: இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல், புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு  – Kumudam

0


தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆளுநர்  உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.

என்றாலும், சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநரின் தமிழ் உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இந்த கூட்டம்  22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் ஸ்டாலினின் பதில் உரையும் இடம் பெற்றது.

அத்துடன் அப்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூட உள்ளது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

சட்டசபை தேர்தல் வருவதால், குறுகிய கால செலவுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்றால், தேர்தலை மனதில் வைத்து அதில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புக்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் தெரிகிறது. 

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார். கூட்டம் நடைபெற உள்ளதால் சட்டப்பேரவை மேசை, மைக், இருக்கைகள் என அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் உடனிருந்தார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version