back to top
28.3 C
London
Sunday, June 21, 2026
No menu items!
Homeசினிமாசமந்தாவுக்கே டஃப் கொடுத்த ஷாருக்கான் -  வீடியோ இணையத்தில் வைரல் - Kumudam

சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ஷாருக்கான் –  வீடியோ இணையத்தில் வைரல் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


2024ம் ஆண்டிற்கான சர்வதேச அகாடமி விருதுகள் விழா அபுதாபி தீவில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்.27ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சமந்தா, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிரஞ்சீவி, நானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும் விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் இணைந்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற சமந்தாவின்  ‘ஊ சொல்றியா மாமா’ ( தெலுங்கு) பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.

இந்த நிலையில், ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். அதில், இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் நடனமாடும் வீடியோவை பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here