Home சினிமா விஜய் 69 படத்தில் இணைந்தார் ‘பிரேமலு’ நாயகி – Kumudam

விஜய் 69 படத்தில் இணைந்தார் ‘பிரேமலு’ நாயகி – Kumudam

0


தென்னிந்தியத் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராகத் திகழ்பவர் விஜய். சமீபத்தில் இவர் அரசியலில் பிரவேசித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் காணவிருக்கும் நிலையில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். 

விஜயின் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) என்கிற திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக தனது 69வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆகவே 69 வது படம்தான் விஜயின் கடைசிப் படமாக இருக்கும் என்பதால் அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

இப்படத்தினை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் பெருகியிருந்த நிலையில், சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இதனையடுத்து இத்திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அப்டேட்டும் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் பீஸ்ட் படத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும், பிரியாமணி, பிரேமலு நாயகி மமிதா பைஜு, இந்தி நடிகர் பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் பிரேமலு நாயகி மமிதா பைஜூ விஜய் 69 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான ப்ரேமலு என்கிற மலையாளத் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரிய வரவேற்பினைப் பெற்றது. அப்படத்தின் நாயகியான மமித பைஜூவுக்கென தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் விஜயின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு கொள்ளச் செய்திருக்கிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version