Home சினிமா Dare Devil ஆக அஜித்… புது அவதாரம் எடுத்த ஷாலினி…! – Kumudam

Dare Devil ஆக அஜித்… புது அவதாரம் எடுத்த ஷாலினி…! – Kumudam

0


நடிகர் அஜித் குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படமான ’டேர் டெவில்’ (Devil படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில், ”34 ஆண்டுகளாக பல தடைகளை உடைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஊக்குவித்து வரும் அஜித் சாரின் இந்த சிறப்பான பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே பதிவில், “என்மீது அஜித் குமார் சார் நம்பிக்கை வைத்ததற்கும், ஆதரவளித்ததற்கும் நன்றி. தயாரிப்பாளர் ஷாலினி மேடத்திற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ”டேர் டெவில்” திரைப்படத்தை ஷாலினி அஜித் தயாரித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

https://x.com/Adhikravi/status/2084251108361592882?s=20

ஷாலினி அஜித்தின் தயாரிப்பாளர் அவதாரம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இப்படத்தை Brave Hearts Production நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி முதன்முதலாக ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) படத்தின் மூலம் இணைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு, தற்போது இரண்டாவது முறையாக டேர் டெவில் திரைப்படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது கூட்டணி படமான AK64 – டேர் டெவில் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version