back to top
17.2 C
London
Thursday, June 18, 2026
No menu items!
Homeஅரசியல்மீடியாவை எப்படி சந்திப்பது? விஜய்க்கு  பாடம்  எடுத்த ஜெயக்குமார்..! - Kumudam

மீடியாவை எப்படி சந்திப்பது? விஜய்க்கு  பாடம்  எடுத்த ஜெயக்குமார்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. ஆனால் இன்னும் பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி மூச்சே விடாமல் இருக்கின்றார். பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்த போதும் கூட பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார் முதலமைச்சர் விஜய். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், எப்படி பிரதமர் மோடி பதவியேற்ற இந்த 12 ஆண்டுக்காலமும் பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்திக்காமல் இருக்கிறாரோ, அவர் வழியைத்தான் விஜய்யும் பின்பற்றுகிறார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. 

மேலும், முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலிலதா மு..கருணாநிதி, மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி போன்றோர் என்னத்தான் ஆட்சியில் சிக்கல் வந்தாலும், பிரச்சனைகள் வந்தாலும், அவர்கள் மீது தவறே இருந்தாலும்,  பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றதில்லை. அந்த மரபை அப்படியே சுக்குநூறாக நொறுக்கி, மன்னராட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருப்பது குறித்து விமர்சித்து பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், செய்தியாளர்களை சந்திப்பது குறித்து மிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு பாடம் எடுப்பது போன்ற  எஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

https://x.com/djayakumaroffcl/status/2066554358989566432?s=20

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜெயக்குமாரின் பதிவிற்கு கீழ் தவெகவினர் ஜெயகுமாருக்கு விஜய் பாடம் எடுப்பது போன்ற ஏஐ புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here