Home அரசியல் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது: புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு?...

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது: புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு? – Kumudam

0


தவெக அரசு அமைந்துள்ள முதல் சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டசபை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 19, 20- ஆகிய இருநாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு. 22-ம் தேதி திங்கட்க்கிழமை ஆளுநர் உரை மீதான எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நாளை தினம் ஆளுநர் உரைக்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என முடிவு செய்யப்படும். அதன்படி 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம், பதிலுரை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அலுவல் ஆய்வுக்குழு தலைவர்: 1.  ஜே.சி.டி. பிரபாகர், பேரவைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

உறுப்பினர்களாக  ச. ஜோசப் விஜய், முதலமைச்சர். என். ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர். கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் பேரவை முன்னவர். ரா. நிர்மல் குமார், எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்.செ. ராஜேஷ் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர்.

வன்னி அரசு, சமூக நீதித் துறை அமைச்சர்.. ரா. சபரிநாதன், அரசுத் தலைமைக் கொறடா.. உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்.. ஏ.வ. வேலு, திமுக,11. சிவசங்கர், திமுக,  எடப்பாடி பழனிசாமி, அதிமுக, ஓ.எஸ். மணியன், அதிமுக, முனைவர் சௌமியா அன்புமணி, பாமக, ஆர். செல்லசுவாமி, சிபிஎம்,. இராமச்சந்திரன், சிபிஐ, எஸ்எஸ்பி சையது பாரூக் பாஷா, ஐயுஎம்எல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, மின் வெட்டு, பாட்டிலுக்கு ரூ.10, எம்எல்ஏக்கள் ராஜினாமா  உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி தவெக அரசுக்கு தலைவலியை கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தமிழக சட்டசபை கூட்டம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version