Home அரசியல் பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருமா? நிலம் கையகப்படுத்திய அதிகாரியை மாற்றிய தவெக அரசு. –...

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருமா? நிலம் கையகப்படுத்திய அதிகாரியை மாற்றிய தவெக அரசு. – Kumudam

0


இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5476 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இத்திட்டம் அப்பகுதி சேர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல சென்னைக்கு பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது.
 

இத்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எதிர்த்த  விஜய் தற்போது இது  குறித்த  தீவிர ஆலோசனை நடைபெற்றக் கொண்டிருக்கின்றன. மேலும் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இங்கு கட்டாயம் விமானம் நிலையம் அமைக்கப்பட வேண்டும் காலத்தின் கட்டாயம் என்று விமான நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

அதுமட்டுமல்லாமல்  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையம் மிக அவசியமானது என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் கிரெடாய் (CREDAI) போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.  இதற்கிடையில் விஜய் முதலமைச்சராக ஆட்சி அமைத்த நிலையில் இத்திட்டம் நிறுத்தப்படுமா இல்லை இதற்கு பதிலாக சிப்காட் தொழில் பூங்காவை அமைக்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

திட்டத்தை கைவிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ‘சிப்காட்’ (SIPCOT) தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து பல அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்த புதிய அதிகாரியை  நியமனம் செய்துள்ளனர்.

சிறப்பு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கீதா பிரியா தற்போது பரந்தூர் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக நியமனம் செய்யபட்டுள்ளார்.புதிய அதிகாரி கீதா நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வாரா அல்லது ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு மட்டும் வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version