Home அரசியல் இன்று ஒரே நாளில் 5 பெண் குழந்தைகளுக்கு பாலிய* வன்கொடுமைகள்:  தடுக்க முடியாமல் தடுமாறும்  தவெக...

இன்று ஒரே நாளில் 5 பெண் குழந்தைகளுக்கு பாலிய* வன்கொடுமைகள்:  தடுக்க முடியாமல் தடுமாறும்  தவெக அரசு  – Kumudam

0



கடந்த தேர்தலின் திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டி இருந்தார். தவெக அரசு பொறுப்பேற்று 1 மாதங்கள் கடந்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க சிங்கம் பெண் சிறப்பு படை முதல்வர் விஜய் உருவாக்கினார். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் குறைந்தபாடு இல்லை. 

தினந்தோறும் பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முடியாமல் தவெக அரசு தடுமாறி வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்றைய தினம் மட்டும் தமிழகத்தின் 5 இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தையை இந்த கொடூர நிலைக்குத் தள்ளிய ஒரு வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதில் பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற 19 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரவணன் (41) என்பவரரை போலீசார் கைது செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த 1ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாம்பரம் அடுத்த படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர். சிறுமி கூச்சலிடவே வட மாநில இளைஞரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் காவல்நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே ஆனந்த நகர் தேவாலயத்தில் பணியாற்றிய மதபோதகர் அருள்ராஜ், தேவாலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுமி தாயிடம் விவரங்களை பகிர்ந்ததையடுத்து, குடும்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி படை எங்கே போனது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு எதிராக கேள்விகளை முன்வைத்துள்ளனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version