back to top
20.4 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஜூன் 22-ல் ரூ.2500 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை..? - Kumudam

ஜூன் 22-ல் ரூ.2500 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை..? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிக முக்கிய திட்டமாகும். சொல்லப்போனால், 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்கு இந்த திட்டமே பிரதானமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை பெற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந் நிலையில், தேர்தலின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அது போல் தவெக தலைவர் விஜய்யும், தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் ரூ 2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார். 

அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றிப் பெற்று, கூட்டணி ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவர் போடும் முதல் கையெழுத்து மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு தொடர்பாகத்தான் இருக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்துவருகிறது. இதற்கிடையில், ஏற்கனவே வழங்கப்பட்டு கொண்டிருந்த 1000 ரூபாயாவது வழங்குவார்கள் என்றிருந்த நிலையில், தாமதமாகத்தான் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பயனாளிகளின் அக்கவுண்டிற்கு வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான 1000 ரூபாயும்  வரவு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக விஜய் எப்போதுதான் உயர்த்தி வழங்குவார்? அதுதொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இத்தையச் சூழலில், வரும் ஜூன் 22ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும், வரும் ஜூலை மாதம் முதலே ரூ.2,500 கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22-ல் மகளிருக்கு நல்ல செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில், ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைந்து வரும் 1.31 கோடி பெண்களுக்கு இந்த 1000 ரூபாயானது நேரடியாக 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமா? அல்லது தவெக அரசின் புதிய விதிமுறைகளின்படி புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் மூலமாகப் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here