பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை. We the leader என்ற அமைப்பை தொடங்கி இருந்தார். இந்த இயக்கத்தில் சுமார் 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கரு.நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் தங்களை இணைத்து கொண்டு உள்ளனர். இன்னும் பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைய உள்ளதாக தெரிகிறது.
இயக்கம் பின்னர் கட்சியாக உருவெடுக்கும், 2029 நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கட்சி பெயர், நிர்வாகிகள், கட்சி விதிகளை உருவாக்குவதில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.
ரஜினி தனது படம், பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்து இருந்தாலும், அண்ணாமலைக்கு மறைமுகமாக ரஜினிகாந்த் தனது ஆதரவை தந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். அப்போது ரஜினிகாந்த் புதிதாக கட்சி பெயரை பதிவு செய்து வைத்திருந்தார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினிகாந்த் பதிவு செய்த பெயரை அண்ணாமலை பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.
மக்கள் சேவை கட்சி பெயர், கொடி ஆகியவற்றை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி, அண்ணாமலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் மாநாடு நடத்தி, அதில் கட்சி பெயர், கொடி ஆகியவற்றை அண்ணாமலை அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
