கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில்: இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருதடவ அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன டாஸ்மாக் கடைக்கு போயிட்ட. ஆனால் கடை மூடி இருந்துச்சு.
நான் சென்று கடை கதவைத் தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம், ‘நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன்.இயக்குநர் இங்குதான் வரச் சொன்னார்’ என்றேன். அதெல்லாம் எனக்கு தெரியாதுனு மீண்டும் ஓயின் ஷாப் கடையை மூடி கொண்டார். அதன் பிறகு புரொடக்ஷன் நபர் எனக்குப் போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.
இன்னொரு முக்கியமான விஷயம், இப்ப எல்லாம் நைட் 9:45 மணிக்கே கடைகளை முழுமையாக மூடிவிடுகிறார்கள். இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் காலையில் 7 மணிக்கே டாஸ்மாக் திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கு. எனவே, கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் பேசி முடித்தார்.
