back to top
16.1 C
London
Monday, June 15, 2026
No menu items!
HomeசினிமாDoctor வேடத்தில் தலைவர்..? Peak சம்பவம் லோடிங்..! - Kumudam

Doctor வேடத்தில் தலைவர்..? Peak சம்பவம் லோடிங்..! – Kumudam

Date:

Related stories

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் – Kumudam

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் - Kumudam...

‘ஏதேன் தோட்டத்து ரோஜா’ பூஜா ஹெக்டேவின் வசீகரிக்கும் புகைப்படங்கள் – Kumudam

‘ஏதேன் தோட்டத்து ரோஜா’ பூஜா ஹெக்டேவின் வசீகரிக்கும் புகைப்படங்கள் -...
spot_imgspot_img


தமிழ் சினிமாவின் தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக கெரியரின் உச்சத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் நடித்த கூலி படத்தின் வசூல் சுமாராகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்து என்றே சொல்ல வேண்டும். காரணம், வின்டேஜ் தலைவர் ரீகியேஷனை ஏஐ மூலமாக லோகி செய்தது ரஜினி ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இருந்தது.

கூலி படத்தைத் தொடர்ந்து, அடுத்தது தலைவரை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஜெயிலர் 2, KHvsRK, தலைவர் 173 என பேக் டூ பேக் படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிந்த நிலையில், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கான கிளிம்ஸூம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.       

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 173′ திரைப்படத்தை  ஓ மை கடவுளே‘, ‘டிராகன்ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி தான் இயக்கவுள்ளதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதனை இயக்க முடியாத சூழலில் சிபி சக்ரவர்த்தி தள்ளப்பட்டார். இவருக்கு பதிலாக தான் அஷ்வத் மாரிமுத்து ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க கே சொல்லியுள்ளார்.

இதில் ரஜினிகாந்த் தனது நீண்ட திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுமையான டாக்டர் (மருத்துவர்) கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக விரைவில் ஷூட்டிங்  தொடங்கவிருக்கும் நிலையில், வொயிட் கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் ரஜினி இருக்கும்படியான ஃபோட்டோஷூட்டும் சமீபத்தில் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னால் இந்த சூடான அப்பேட் நியூஸ் ரஜினி ரசிகர்களுக்கு தீனிபோடும் அளவிற்கு அமைந்துள்ளது. எனவே, வசூல் செய்வாரா இந்த டாக்டர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here