back to top
21.4 C
London
Thursday, September 24, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகாலாண்டு லீவுல NO SPECIAL CLASS : மாணவர்களை குஷிப்படுத்திய அரசு ! - Kumudam

காலாண்டு லீவுல NO SPECIAL CLASS : மாணவர்களை குஷிப்படுத்திய அரசு ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலாண்டு விடுமுறை நாட்களில், எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை :

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 26ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் இதனைத் தொடர்ந்து முடிவடைய உள்ளன.

இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது :

வழக்கமாக காலாண்டுத் தேர்வு விடுமுறையின்போது, குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தயாரிப்புக்காக சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உண்டு.

ஆனால், இந்த ஆண்டு விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. மாணவர்கள் தேர்வு அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மனதளவில் புத்துணர்ச்சி பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே பொறுப்பு :

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தப்பட்டு, அதனால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரையே சாரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து பள்ளி நிர்வாகங்களும் இந்த அறிவுறுத்தலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் தடை :

மேலும், காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளி சார்பில் மாணவர்களை சுற்றுலா அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லவும் அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, விடுமுறை காலத்தில் பள்ளிகள் எந்தவிதமான கல்வி சார்ந்த அல்லது வெளிப்புற செயல்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here