back to top
20.2 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசக ஊழியரின் 14 வயது மகள்.. நாசமாக்கிய கூலித்தொழிலாளி... அதிரடி காட்டிய நீதிமன்றம்! - Kumudam

சக ஊழியரின் 14 வயது மகள்.. நாசமாக்கிய கூலித்தொழிலாளி… அதிரடி காட்டிய நீதிமன்றம்! – Kumudam

Date:

Related stories

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் – Kumudam

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் - Kumudam...
spot_imgspot_img


ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியை சேர்ந்த மைதீன்பாஷா என்பவர் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள துணிக்கடையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருடைய மகளான, எட்டாம்  வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடமன ஆசை வார்த்தை கூறி பள்ளிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மைதீன்பாஷா கட்டாய திருமணம் செய்ததை அடுத்து, அச்சிறுமியை ஒன்பது மாத கர்ப்பமாக்கியுள்ளார். 

இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம், பிரசவத்திற்காக அச்சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அரசு மருத்துவர்கள், ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மைதீன் பாஷாவை போக்சோ சடத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி கட்ட விசாரணையை நடத்திய  நீதிபதி சொர்ணகுமார்,  குற்றம்சாட்டப்பட்ட மைதீன் பாஷாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here