back to top
21.5 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில்: முதல்வர் விஜய் சாமி தரிசனம்  - Kumudam

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில்: முதல்வர் விஜய் சாமி தரிசனம்  – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...
spot_imgspot_img


3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார். அடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் புறப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

கோவிலுக்குள் செல்லும்போது முதலமைச்சர் விஜய் மேல்சட்டை அணியவில்லை. அவரது பாதுகாவலரும் மேல்சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்றார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். முன்னதாக கோவிலுக்கு 2.5 அடி நீள வாளை காணிக்கையாக முதலமைச்சர் விஜய் அளித்திருந்தார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளது குறிப்பிடதக்கது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here