back to top
20.8 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeசினிமா‘ஜெயிலர் 2’  திரைப்படம்: ரஜினியுடன் இணையும் பாலிவுட் ஹூரோ ஹிரித்திக் ரோஷன் - Kumudam

‘ஜெயிலர் 2’  திரைப்படம்: ரஜினியுடன் இணையும் பாலிவுட் ஹூரோ ஹிரித்திக் ரோஷன் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் ரூபாய் 650 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படத்தில் இன்னும் ஒரு கேமியோ கதாபாத்திரம் காட்சி படமாக்குவது மட்டும் மீதம் இருந்தது. முதலில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்கவில்லை என ஆன பிறகு பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவை எதுவும் கைகூடவில்லை. சமீபத்தில் இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஹரித்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில்,  படத்திற்கு பலவகையான கெட்டப் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை படப்பிடிப்பில் ஹிரித்திக் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் நடித்திருந்தார்.

இதையடுத்து ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினியுடன், 40 ஆண்டுகளுக்கு பின்பு எந்த கதாபாத்திரத்தில் ஹிருத்திக் நடிப்பார் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here