back to top
21.5 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeசினிமாபரிமளா & கோ திரைப்பட விமர்சனம் - Kumudam

பரிமளா & கோ திரைப்பட விமர்சனம் – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...
spot_imgspot_img


குமுதம் விமர்சனக் குழு

செத்தவன் ரவுடி, போதைப் பொருள் கடத்தல்காரன், கொலைகாரனும் கூட கொலை பண்ணியது யார்? புருஷனா, பொண்டாட்டியா, மூத்த மகளா. ரெண்டாவது பொண்ணா, மாமாவா, சித்தப்பாவா, காதலனா என ஒரு மிடில் கிளாஸ் குடும்பமே குழம்பித் தவிக்குது. ஒவ்வொருவரும் மற்றவர் மீது காரணமே இல்லாமல் சந்தேகப்பட போலீஸுக்கு சந்தேகமெல்லாம் இறந்தவனின் நண்பர்கள், அவனது காதலி, தொழில் பார்ட்னர்கள். பழைய விரோதிகள், பெத்த அம்மா, அவளோட கள்ளக்காதலன்னு லிஸ்ட் போய்கிட்டே இருக்குது.

அவன் மரணம் பலருக்கும் நிம்மதி என்றாலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கினுக்கு மட்டும் பெரிய தலைவலி கோடாரி தைலத்தைத் தலையில் தேய்த்துக்கொண்டு அவர் மூளையைக் கசக்க நமக்கு அவர் மேலயும் ஒரு சந்தேகம் வருகிறது. உண்மையில் கொலை செய்தது யார்? கிரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் மாதிரியான கதையை கொஞ்சம் காமெடியாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ், நினைத்தது நடந்ததா?

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் யோகிபாபு, சிறப்பாக நடித்திருக்கின்றனர். சாண்டி, சிங்கம் புலி, பக்ஸ் நல்ல சப்போர்ட்டிங் கேரக்டர்கள். பட்டையைக் கிளப்பியது மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா பாத்ரூமில் பரிமளா & கோ குளிக்க சண்டை போடுவது முதல், போட்டி போட்டுக் கொண்டு இருவரும் இரண்டு கிரிமினல்களை காதலிப்பது வரை டிபிகல் மிடில் கிளாஸ் டாம் அண்ட் ஜெர்ரி சிஸ்டர்ஸ் பாண்டிராஜ் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எதிர்பார்க்க வில்லை. ரவுடிகளை வைத்துப் பெண்களை இழிவுபடுத்துவது அரு வருப்பு. டிரக் மாஃபியா படத்தில் சராசரி பரிமளா குடும்பம் ஓட்டவே இல்லை. 

‘பரிமளா & கோ’ -சிரிக்காமல் பார்க்கலாம்



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here