back to top
16.3 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeசினிமாகருப்பு பட ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: எந்த ஓடிடி-யில் வெளியாகிறது தெரியுமா?  -...

கருப்பு பட ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: எந்த ஓடிடி-யில் வெளியாகிறது தெரியுமா?  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கடந்த மே 15-ஆம் தேதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பைப் பெற்று, ரூ. 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இது சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாகப் புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, ஒரு கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையான சூர்யாவின் முதல் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. 

தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான ‘வீரபத்ருடூ’ திரைப்படமும் இதே நாளில் ஓடிடியில் வெளியாகிறது.‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா – 47’ திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன் மூலம், இந்த ஒரே ஆண்டிற்குள் நடிகர் சூர்யாவின் மேலும் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here