back to top
20.2 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்உதயநிதி வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு திடீர் விலகல்: காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும்...

உதயநிதி வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு திடீர் விலகல்: காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும் ஜான் ஆரோக்கியசாமி  – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் – Kumudam

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் - Kumudam...
spot_imgspot_img



தி.மு.க., கட்சிக்கு  ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர், ‘பென்’ நிறுவனம் மூலம் கட்சியின் வியூகங்கள் வகுத்து வந்தார். தேர்தல் உள்பட கட்சி தொடர்பாக அனைத்து பணிகளையும் பென் நிறுவனமே மேற்கொண்டு வந்தது. ஆனால் உதயநிதி பென் நிறுவனத்திற்கு மாற்றாக தனது தனியாக ஒரு வியூக வகுப்பாளரை நியமித்து இருந்தார். 

கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கன்கோலுவை, உதயநிதிக்கு வியூக வகுப்பாளராக கடந்த 4 வருடங்களாக செயல்பட்டு வந்தார். தெலுங்கானா, கர்நாடாக சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரசுக்கு சுனில் தேர்தல் வியூக பணிகளை செய்து இருந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிப்பாக சுனில் தேர்தல் பணிகள் செய்து கொடுத்தார். 

பென் நிறுவனமும், சுனில் கொடுத்த அறிக்கையும் முரண்பட்டு இருந்து வந்தது. விஜய் மற்றும் தவெக குறித்து பென் நிறுவனம் கொடுத்த அறிக்கை மாறாக சுனில் உதயநிதியிடம் அறிக்கை கொடுத்து இருந்தார். பல தருணங்களில் பென், சுனில் இடையே பனிப்போர் நிலவி வந்தது. திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என பென் நிறுவனம் அறிக்கை கொடுத்து இருந்தது. ஆனால் தவெக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுனில் தரப்பு கூறி வந்தது. 

ஆனால் திமுக தலைமை உதயநிதி சுனிலின் பேச்சை கேட்கவில்லை. மேலும், தொடர் சுற்றுப்பயணம், தடாலடி அரசியல் போன்ற சுனிலின் அறிவுரைகளை, உதயநிதி உதாசீனப்படுத்தினார். இதனால், சுனிலுக்கும், உதயநிதிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது அவரை விட்டு விலகி விட்டார்.

தமிழக காங்கிரசுக்கு வியூக வகுப்பாளறாக செயல்பட சுனில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தமிழக காங்கிரசில் நுழைய சுனிலுக்கு தடை போடும் வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here