back to top
13 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் - Kumudam

என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூ, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை தவெக அமைத்துள்ளது.  முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அமைச்சர் ஸ்ரீநாத் தனது தொகுதி மக்களிடம் நேரில் நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார். அப்போது மாறுதலாக, திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் பகுதி மக்களிடமும் அவர் நன்றி கூறியுள்ளார். 

இதுகுறித்து அதிமுகவும் ஐடி விங்க் பக்கத்தில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக்கூட அறியாமல், திமுகவைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றிபெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. என விமர்சனம் செய்துள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here