back to top
15.6 C
London
Sunday, August 9, 2026
No menu items!
Homeஅரசியல்அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! - Kumudam

அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



2026 சட்டமன்றத் தேர்தலின்போது “இங்க ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு DMK” என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவை எதிர்த்தே தன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் விஜய். இதனால் திமுக வெறுப்பு என்பது அதிகரிக்க, தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிராக அமைந்தது. பெரும்பான்மையான இடங்களை பிடித்த விஜய், ஆட்சியை அமைக்க டார்கெட் செய்ததும் திமுகவை தான். திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்த தவெக பெரும் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. 

ஆட்சியை அமைத்த பிறகு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெகவை ஒரு எதிர்க்கட்சியாக வெச்சி செய்தது திமுக. எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று திமுக சொன்ன நிலையில், தவெக ஆட்சியில் நடக்கும் வன்முறைகள் தொடர்பாக அறிக்கைகளாக வெளியிட்டு விமர்சனங்களை தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், முதல்முறையாக அனைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருச்சி கிழக்கில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார்.

போதைப் பொருளை நீங்கள் அப்போவே தடுத்திருந்தால் இன்று இவ்வளவு குற்றங்கள் அரங்கேறி இருக்காது என்றும், 6 மாதம் காத்திருப்போம் என்று கூறி 6 நாட்கள் கூட பொறுக்க முடியாமல் அறிக்கைகளாக தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள் என்று காட்டமான விமர்சனங்களை திமுக மீது வைத்திருந்தார். அதோடு, இப்போதும் திமுக vs தவெக இடையே தான் போட்டியே என்று ஆட்சி அமைந்த பிறகும் விஜய் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஒருபக்கம், ஆட்சியை நடத்த முடியாமல் பழியை திமுக மீது தூக்கி போடுகிறார்கள் என்றும், மறுபக்கம் அவர் சொல்வதெல்லாம் உண்மை தான் அனைத்திற்கும் திமுக செய்து வைத்துவிட்டு போனது தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

இப்படியான சூழலில், தவெக ஆட்சி அமைத்த பின்பும் திமுகவை குறிவைப்பது அவர்கள் முன்னர் ஆளுங்கட்சியாக இருந்தது மட்டுமே காரணமல்ல, திமுகவை ஒட்டுமொத்தமாக அழிப்பதே காரணம் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

எதிர்க்கட்சியான அதிமுகவை பாஜகவே அழித்துவிடும் என்பதாலும், தனக்கு எதிராக கொள்கை ரீதியாக செயல்படுவது திமுக மட்டுமே என்பதால், அதற்கு எதிரான வெறுப்பு நெருப்பை அணையவிடாமல் வைத்திருப்பதே ஆட்சியை தக்க வைக்க தவெகவிற்கு ஒரு சிறந்த வழி என்று கூறப்படுகிறது. அதோடு, தற்போது தவெகவிற்கு ஒரு எதிர் சக்தியாக திமுக மட்டுமே உள்ளதால், எக்காரணம் கொண்டும் திமுக மீண்டும் மீண்டு விடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

எப்படி, பாஜக எதிர்ப்பை வைத்து திமுக கடந்த தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்ததோ, அதே statergy-ஐ தற்போது திமுகவுக்கு எதிராக விஜய் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், திமுக இளைஞர்களை டார்கெட் செய்யத் தொடங்கியுள்ளதால், அவர்களை திமுக பக்கம் செல்லவிடாமல் தடுப்பதற்கு விரைவிலேயே வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிரான நிலை நீடித்துக் கொண்டிருப்பதால், பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவது சாத்தியமற்றது. ஆனால் திமுக தன்னுடைய கட்டமைப்பை சரி செய்து வந்தாலும், அதனால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாத அளவிற்கான திட்டங்களை விஜய் தீட்டி வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் மாஸ்டர் பிளானில் இருந்து திமுக மீண்டு வருமா? அல்லது எதிர்க்கட்சியாகவே இருந்துவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here