back to top
14.6 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! - Kumudam

திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



2026 சட்டமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் நின்ற விஜய், இரண்டு தொகுகளிலும் வெற்றிப் பெற்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதனால், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் விஜய். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத அவர், தன் மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்காக ‘சிங்கப்பெண்’ திட்ட தொடக்க நிகழ்ச்சியையும் ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில், முதல்முறையாக திருச்சியில் மக்களை சந்தித்து பேசியுள்ளார் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தவெக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளை கடுமையாக சாடினார். சட்டமன்றத்தில் சைலண்டாக இருந்த முதலமைச்சர், மக்கள் மன்றத்தில் ஆக்ரோஷமானதைக் கண்டு தவெகவினர் உற்சாகமடைந்தனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், இது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு என்று நினைத்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வாக அமைந்துள்ளது என்கின்றனர்.

இந்த நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் தவெக சார்பில் யார் போட்டியிடப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெல்லமண்டி நடராஜன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் வெல்லமண்டி நடராஜனும், அவரது மகனும் விஜயை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம், அல்லது அவரது மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here