back to top
15.3 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள்: திமுக மீது முதல்வர் விஜய்...

தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள்: திமுக மீது முதல்வர் விஜய் சாடல் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: “6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள், ஆனால் 6 நாள்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுக – தவெக இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை.தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தவெக ஆட்சியமைக்கக் கூடாது என திமுக மற்றும் பலரும் நினைத்தார்கள்.திமுக நம்மை எதிர்க்க, அவமானப்படுத்த, அத்தனையும் நமக்கு நன்மையே. ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது செய்திகள் பார்க்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். அது நல்லதுதான். இளைஞர்கள் அனைவரும் அரசியல் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். வாக்களித்த மக்களை தற்குறி என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்களா? எங்களுக்கு போட்டால் கெட்டவர்களா?

நீங்கள் தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள், இன்னமும் ஆக்குவார்கள். மக்களை புரிந்துவைத்திருந்தால் இப்படியெல்லாம் நீங்கள் பேசியிருக்க மாட்டீர்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் போதை கலாசாரம் பரவிக் கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் ஏன் தடுக்கவில்லை. அதைத் தடுத்திருந்தால் பெண்களுக்கு இவ்வளவு நடந்திருக்குமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு என் மீது பழி போடுவதா?

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்தரித்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் நாங்கள் கோட்ல சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவர்கள் தான் கோட், சூட் போட வேணுமா? நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலர் கலராக ஒன்றும் போடவில்லையே. தேர்தலுக்கு முன்பும் ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறார்கள்.

இன்றும் இருசக்திகள் இடையில்தான் போட்டி, ஒன்று தூய சக்தி தவெக, தீய கச்தி திமுக இடையில்தான் போட்டி. அதிமுகவும், திமுகவும் சேர்ந்து நம்மை ஆட்சியமைக்க விமாடல் தடுக்க முயன்றனர்.அதிகபட்சமாக எல்லா கூட்டங்களிலும் 20 நிமிடம்தான் பேசுவேன். மக்கள் என்னை பார்த்து மக்களுக்கு உழைப்பதை நீங்கள் பாருங்கள். எனக்கு எதிரிகள் இல்லையா. இரண்டு பேர் இடையே தான் போட்டி. த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடையில் வேலையே இல்லை. தி.மு.க.வும், மற்றும் பலரும் சேர்ந்து கடைசி 5 நாட்களில் ஆட்சியமைக்க ஒரு கூத்து நடத்தினார்கள். எதிர்காலம் எப்படி இருக்கும், தி.மு.க. நம்மை எதிர்க்க எதிர்க்க அத்தனையும் நமக்கு நன்மையே.

இந்த ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் நடப்பதை உன்னிப்பாக சிலர் கவனிக்கிறார்கள். அது நமக்கு சந்தோஷம்தான். இது யாரால் நடந்தது. இப்படிபட்ட நம் மக்களை தற்குறி என்று இன்னமும் சொல்கிறார்கள். தற்குறிகள் என்று சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கினார்கள். மக்களை தவறாக புரிந்ததால்தான் இந்த நிலைமை. கவர்ச்சியை நம்பி ஓட்டுபோட்டார்களாம். தற்குறி என்று சொல்கிறார்கள். அண்ணா ஆக்கிய கட்சியை அடிமையாக மாற்றியது யார். அதற்கு காரணம் உங்கள் குடும்பத்திற்குள்ளேயே போய் தேடுங்கள். நீங்கள் மக்களை தப்பாக பேசினால், நான் கேட்பேன். இந்த விஜய் தான் தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதி.

இந்த பூர்வ ஜென்ம பந்தத்தை யாராலும் கெடுக்க முடியாது. மக்களையும், எங்களையும் பிரிக்க நினைத்தால் ஒரு காலத்திலும் நடக்காது. ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக இருந்து பாருங்கள். நாங்கள் 200 யூனிட் இலவசம் என்று அறிவித்தோம். முதல் 100 யூனிட் ஜெயலலிதா கொடுத்தது. இன்றைக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு. விவசாய கடன் தள்ளுபடியை முடிந்த அளவு செய்தேன்.

பொய் சொல்ல அரசியலுக்கு வரவில்லை. உங்களுடன் இருக்க அரசியலுக்கு வந்தேன். விவசாய பெருமக்களே கவலைப்படாதீர்கள். தமிழகம் முழுவதும் போதைக் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. முன்கூட்டியே தடுத்திருந்தால், பெண்களுக்கு எதிரான கொடுமை நடக்கிறது. அதை தடுக்க, சிங்கப்பெண் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம். குதிரை பேரம் செய்வதாக சொல்கிறார்கள். தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து திருட்டு தனமாக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

தீய சக்தி இப்போது மக்களைவிட்டு தூரமாக போன தூர சக்தி, ஓர சக்தி, பாறை சக்தி. தூர்ந்து போன சக்தி. நீங்கள் என்னை அவதூறு பேசலாமா. நமக்கு எதற்கு வேறு அரசியல். காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை தடுத்து இருக்கிறோம். த.வெ.க. ஆட்சி எந்தபாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமாறு ஆட்சியாக இருக்கும். மாநில உரிமை, நதிநீர், சமூகநீதி எதையும் விட்டுக்கொடுக்கமாட்டோம். 

234 தொகுதிகளும் நம்ம தொகுதிதான். திருச்சி கிழக்கு எனக்கு செல்லப்பிள்ளை. இடைத்தேர்தலில் உங்கள் வீட்டு பிள்ளை வேட்பாளராக நிறுத்த உள்ளோம். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொடுப்பேன். ஒரு நாள் அதை நடத்தி காண்பிப்பேன். எனக்கு வேறு வேலை இல்லை. என் பணி, பணி செய்து கிடைப்பதே. இவ்வாறு அவர் பேசினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here