back to top
26.1 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeசினிமாகிராமத்தின் பல வருட கனவை நிறைவேற்றிய சிறுவன்..! - Kumudam

கிராமத்தின் பல வருட கனவை நிறைவேற்றிய சிறுவன்..! – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...
spot_imgspot_img



ஒரு சின்னஞ்சிறிய  பையன், தன் தாய் தந்தைக்கும் தன் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான். சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசனில் பங்கேற்றுள்ள விஷ்னு என்ற சிறுவனை அனைவரும் அறிந்திருப்பர்.    

விஷ்ணுவும் அவன் வாழும் கிராம மக்களும் குடிதண்ணீருக்கே  வழியின்றி தவித்துவந்துள்ளனர்.  சிறுவயதில் இருந்தே நன்றாக பாடக்கூடிய தன் முயற்சியால் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதல்கட்ட ஆடிஷன்களில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பை பெற்றான்.

அவன் நிகழ்ச்சியின் முதல் நாளில் “அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்….. அத்தனையும் மறந்துப்புட்டேன் அடியே உன்ன பாத்ததுமே…”  என்று மழலைக்குரலில் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தான். நடுவர்கள் மனோ சித்ரா மற்றும்  இசையமைப்பாளர் D. இமான், மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா அவனுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.  

ஆனால் அவன் விருப்பம் தன் கிராமத்து மக்கள் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது. அவன் இந்த நிகழ்ச்சியில் கொடுத்த ஒரு குரல், நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் செவிக்கு எட்டியது.  

இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கையில் கையில் எடுத்தார்.  உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த ஏழை எளிய மக்களுக்கு குடிததண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார்.  கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து https://blog.wgce.ac.in/ சென்று குடிததண்ணீர் எடுத்து வந்த நிலையை மாற்றியுள்ளார். இப்போது அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே தண்ணீர் வசதி வந்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் அளித்துள்ளது. 

விஷ்ணு என்ற ஒரு சிறு பையன் தன் கிராமத்தின் துயர் துடைத்துள்ளான் அவன் திறமையும் அவனது சமுதாயம் சார்ந்த இந்த நோக்கமும் இந்த வயதில் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.  
 
“ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல தண்ணியும் முக்கியம்” என்று அந்த ஊர் மக்கள் ராகவா லாரென்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் வாரம் டிசம்பர் 14, 15  சனி மற்றும் ஞாயிறு மலை 6.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பார்த்து மகிழலாம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here