back to top
12.2 C
London
Saturday, September 26, 2026
No menu items!
Homeஅரசியல்“வீரமணியை காப்பாற்றியதா திமுக?” – அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி! - Kumudam

“வீரமணியை காப்பாற்றியதா திமுக?” – அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி! – Kumudam

Date:

Related stories

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை… தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற...

ONE SUN.. ONE MOON.. ‘ஜெயிலர் 2’ படத்தின் SECOND SINGLE வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன்...
spot_imgspot_img



சென்னையைச் சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெம் வீரமணி, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த வழக்கில் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக எதுவும் செய்யாமல் இருந்ததன் பின்னணி என்ன என்று அமைச்சர் நிர்மல்குமார் திமுகவினரைப் பார்த்து சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: ”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் 28ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் விஜய், காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார்.

வீரமணியைக் காப்பாற்றும் வேலையில் இப்போதும் திமுக ஈடுபடுகிறது. 2024ஆம் ஆண்டில் புகார் கிடைத்தும் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? திமுக ஆட்சிக் காலத்தில் மூடி மறைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை? வீடியோ ஷேடோவாக இருந்தது, போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை மூடியதாக ரகுபதி கூறுகிறார். வீரமணி வழக்கில் திமுக ஓவர் ரியாக்ட் செய்கிறது. திமுக ஆட்சியின்போது ஜெம் வீரமணி வழக்கில் எஸ்ஐடி அமைக்காதது ஏன்? ஜெம் வீரமணி விவகாரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது.

வீரமணி வழக்கு நடந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்? மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்தும் அவர் அமைதியாக இருந்தாரா? வீரமணி வழக்கில் போலீஸார் சம்பந்தப்பட்டபோது, துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் என்ன செய்தார்? வீரமணி குப்பனோ, சுப்பனோ அல்ல. பாலியல் வன்கொடுமை குறித்து உளவுத்துறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? வழக்கு தொடர்பாக பல பேர் பேரம் பேசி வீரமணியிடம் பணம் பறித்ததாகத் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.

வீரமணி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். ஒருவரும் தப்பிக்க முடியாது. வீரமணி வழக்கில் யார் மீது ஆதாரம் உள்ளதோ, யார் பணம் பறித்தார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here