back to top
16.1 C
London
Saturday, September 26, 2026
No menu items!
Homeஅரசியல்87 வயதாகும் ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி அதிர்ச்சி தகவல்...

87 வயதாகும் ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி அதிர்ச்சி தகவல் – Kumudam

Date:

Related stories

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை… தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற...

ONE SUN.. ONE MOON.. ‘ஜெயிலர் 2’ படத்தின் SECOND SINGLE வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன்...
spot_imgspot_img



பாமக சின்னம், கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி டாக்டர் அன்புமணி சென்னை உரிமையியல்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராமதாஸ்க்கு 87 வயது ஆகி விட்டது, வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும்  நிலையில் இல்லை

இதை பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழிநடத்துகிறார்கள். சில தனி நபர்கள் பாமக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ராமதாஸ் தலைவர் என அறிவித்துக் கொண்டது பாமகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை, வழிகாட்டுதல்  மட்டுமே மேற்கொள்ள முடியும்.

பாமகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை இல்லை. தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை 

அன்புமணி தாக்கல்  செய்த இந்த  மனுவுக்கு மார்ச் 11 ம் தேதிக்குள் ராமதாஸ் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here