Home அரசியல் ரஜினி-கமலாக மாறிய ராகுல்-ஸ்டாலின்: காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ வைரல் – Kumudam

ரஜினி-கமலாக மாறிய ராகுல்-ஸ்டாலின்: காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ வைரல் – Kumudam

0



45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் ப்ரோமோக்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக நெல்சன் உருவாக்கியுள்ளார்

ப்ரோமோ வீடியோவில் தீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி முகத்தை வைத்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இளமை தோற்றத்துடன் ஸ்டாலின், ராகுல் தோன்றும் இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மோடி – அமித் ஷா முகத்தை வைத்து தமிழக பாஜக முன்னதாக வெளியிட்டு இருந்தது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version