back to top
22.1 C
London
Saturday, June 27, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஅடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா ? அரசு  செயலாளர் சுற்றறிக்கையில் திடீர் பரபரப்பு  - Kumudam

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா ? அரசு  செயலாளர் சுற்றறிக்கையில் திடீர் பரபரப்பு  – Kumudam

Date:

Related stories

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரி ஜாமின் மனு மீது மனிதாபிமான அடிப்படையில் சென்னை...

”ஆர்த்தியை இதுக்காகத்தான் Divorce செய்கிறேன்….” – மனம் திறந்த ஜெயம்ரவி!

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது எதற்காக என்பது குறித்து...

சட்டசபைக்கு ரீ எண்ட்ரிக்கு தயாராகும் ஸ்டாலின்? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி 

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட போவது...

விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளின் ஊழல் புகார்களையும் விசாரிக்க...
spot_imgspot_img



பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றிக்கையில், ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here