Home சினிமா மேக்கிங் மிரட்டுதே.. பாகுபலி பிரபாஸின் நடிப்பில் வெளியானது ‘தி ராஜாசாப்’ டீசர்! – Kumudam

மேக்கிங் மிரட்டுதே.. பாகுபலி பிரபாஸின் நடிப்பில் வெளியானது ‘தி ராஜாசாப்’ டீசர்! – Kumudam

0


பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் பிரபாஸ், தற்போது இயக்குநர் மாருதி இயக்கத்தில் ‘தி ராஜாசாப்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் பேண்டஸி ஹாரர் பாணியில் ஏற்கெனவே ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ள காஞ்சனா, அரண்மனை, தில்லுக்கு துட்டு வரிசையில் பிரபாஸின் நடிப்பில் உருவாகியுள்ள ’தி ராஜாசாப்’ திரைப்படமும் இடம்பெறும் என்கிற நம்பிக்கையினை படத்தின் டீசர் தந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் மாருதி, தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத், இசையமைப்பாளர் தமன் எஸ், மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் உட்பட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பேண்டஸி ஹாரர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள தமனின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கார்த்திக் பழனியின், ஒளிப்பதிவும் டீசரை பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ தி ராஜாசாப்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ரித்தி குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பிரபாஸ் இதுவரை தான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். டீசரின் இறுதியில் தோன்றும் சஞ்சய் தத், அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியீடு:

‘தி ராஜாசாப்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய திகில் ஃபேன்டஸி படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் படம் குறித்து கூறுகையில், “தி ராஜாசாப்’ படத்தினை ஆரம்பித்த போது, இந்தியா இதுவரை கண்டிராத வகையில் ஒரு பெரிய படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இன்று ரசிகர்கள் முன்னிலையில், பிரம்மாண்ட அரங்கில் டீசரை வெளியிட்டதே அதற்கு சாட்சி. இது இன்னும் ஆரம்பமே” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் மாருதி பேசுகையில், “தி ராஜாசாப் என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்” என குறிப்பிட்டார்.

பாகுபலி வெற்றியினைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸூக்கு இந்தியா முழுவதும் நல்ல மார்க்கெட் இருக்கும் சூழ்நிலையில், ‘தி ராஜாசாப்’ திரைப்படமும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version