Home அரசியல் நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்கிறார் – Kumudam

நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்கிறார் – Kumudam

0



தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஓரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர் முதற்கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், ஓரிரு நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம். 2 முறை வேட்பாளர் நேர்காணலை விஜய் நடத்தி இருந்தார். இதில் 117 வேட்பாளர்களை தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மீதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியும் விரைவில் முடிந்தால் மீதி தொகுதிகளுக்கும் சேர்த்து தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தவெக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக  117 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் அதாவது வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள அறிமுகக் கூட்டத்தில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version