back to top
33.1 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeஉலகம்முழுவதும் அழிந்த காசா!! அடுத்ததாக ரஃபா மீது குறிவைக்கும் இஸ்ரேல்...அச்சத்தில் பாலஸ்தீனர்கள்... - Kumudam

முழுவதும் அழிந்த காசா!! அடுத்ததாக ரஃபா மீது குறிவைக்கும் இஸ்ரேல்…அச்சத்தில் பாலஸ்தீனர்கள்… – Kumudam

Date:

Related stories

என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?… சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது,...

FAIR DELIMITATION: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு...

என்னது “மன்மத நன்றி”யா?… வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..!

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின்...
spot_imgspot_img


ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் பொருட்டு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 2023-ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய காசா-இஸ்ரேல் இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. காசா மீது வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதன் மூலம் இருதரப்பிலும் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனுக்கு அரபு நாட்டு தலைவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தாலும் கூட, இஸ்ரேல் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியை முற்றிலும் இஸ்ரேல் அழித்து விட்ட நிலையில், அங்கிருந்த மக்கள் பெரும்பாலானோர் தெற்குப் பகுதியான ரஃபா, கான்யூனிஸ் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

இதனை பொறுத்துக் கொள்ளாத இஸ்ரேல், கான்யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தியது. அதேபோல் ரஃபாவிலும் தனது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியா நிலையில், இன்று (மார்ச்-19) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. எகிப்து எல்லைக்கு அருகே இருக்கும் ரஃபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.  ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயமும், மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதால் ரஃபாவில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here