back to top
25 C
London
Thursday, June 25, 2026
No menu items!
Homeஅரசியல்3 சிட்டிங் அமைச்சர்களுக்கு கல்தா,  60 புதுமுகங்கள்: திமுக வேட்பாளர் பட்டியலில் அதிரடி காட்டிய ஸ்டாலின்!...

3 சிட்டிங் அமைச்சர்களுக்கு கல்தா,  60 புதுமுகங்கள்: திமுக வேட்பாளர் பட்டியலில் அதிரடி காட்டிய ஸ்டாலின்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுகவின் 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். “திமுக 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 இடங்களிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். எஞ்சிய 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் தனிச் சின்னங்களில் போட்டியிடுகின்றன.

முக்கிய மாற்றங்கள் மற்றும் விஐபி வேட்பாளர்கள்

இந்த முறை வேட்பாளர் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரும் கரூரின் முக்கிய முகமுமான செந்தில் பாலாஜி, இம்முறை கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) மற்றும் பால் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோருக்கும் திமுக வாய்ப்பளித்துள்ளது.

அதேபோல், சிட்டிங் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் மற்றும் ஆர் காந்தி ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் சீட் வழங்கப்படாமல் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் :

காஞ்சிபுரம்: நித்யா

உத்திரமேரூர்: சுந்தர்

மதுராந்தகம் (தனி): அமலு பொன்மலர்

செங்கல்பட்டு: கார்த்திக் தண்டபாணி

தாம்பரம்: கிருத்திகா தேவி

ஆலந்தூர்: தா.மோ. அன்பரசன்

சோழிங்கநல்லூர்: அரவிந்த் ரமேஷ்

மயிலாப்பூர்: வேலு

தியாகராய நகர்: ராஜா அன்பழகன்

சைதாப்பேட்டை: மா. சுப்பிரமணியன்

விருகம்பாக்கம்: பிரபாகர் ராஜா

அண்ணாநகர்: சிற்றரசு

ஆயிரம்விளக்கு: எழிலன் நாகநாதன்

துறைமுகம்: சேகர்பாபு

ராயபுரம்: சுபையர் கான்

எழும்பூர்: தமிழன் பிரசன்னா

திருவிக நகர் (தனி): ரவிச்சந்திரன்

வில்லிவாக்கம்: கார்த்திக் மோகன்

பெரம்பூர்: ஆர்.டி. சேகர்

ஆர்கே நகர்: எபினேசர்

மாதவரம்: சுதர்சனம்

அம்பத்தூர்: பூர்ணிமா

மதுரவாயல்: கணபதி

ஆவடி: நாசர்

பூந்தமல்லி: கிருஷ்ணசாமி

திருவள்ளூர்: ராஜேந்திரன்

கும்மிடிப்பூண்டி: கோவிந்தராஜன்

கொளத்தூர்: மு.க. ஸ்டாலின்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின்

3 அமைச்சர்களுக்கு கல்தா

ராணிப்பேட்டையில் காந்தி, பத்மநாபபுரம்  மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதி சிபிஐ-க்கு வழங்கப்பட்டுள்ளது. காந்திக்கு பதிலாக அவரது மகனுக்கு ராணிப்பேட்டை தொகுதி திமுக ஒதுக்கியுள்ளது.

அதிமுக காங்கிரஸ் 18 இடங்களில் நேரடியாக மோத உள்ளன. சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளில் 15 இடங்களில் திமுக நேரடியாக களம் காண்கிறது. வேளச்சேரி ஒரே தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு 

சமீபத்தில் திமுகவில் ஐக்கியமாகிய ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய மூவருக்கு சட்டமன்ற தேர்தல் போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார். அதே போன்று கரூர் மாவட்டத்தில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட உள்ளார். கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கில் அவர் போட்டியிட உள்ளது குறிப்பிடதக்கது. தற்போது இந்த தொகுதியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக உள்ளார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here