Home அரசியல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, புதிய நீதிக் கட்சிக்கு கல்தா  – Kumudam

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, புதிய நீதிக் கட்சிக்கு கல்தா  – Kumudam

0


பாஜக முக்கிய தலைவர்களாக விளங்கும் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி, அவினாசியில் எல். முருகன் போட்டியிடுகிறார்கள்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த விஜயதாரணிக்கு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கியுள்ளது. 

அண்ணாமலை உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த போதும், வேட்பாளர் அறிவிப்பில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அதே போன்று பாஜக 1 தொகுதியை புதிய நீதிகட்சிக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் தொகுதி ஒதுக்கவில்லை. 

பாஜக வேட்பாளர் பட்டியல்: ஆவடி ராஜசிம்ம மகிந்திரா, மயிலாப்பூர் தமிழிசை சௌந்தரராஜன், தளி டாக்டர் நாகேஷ் குமார், திருவண்ணாமலை சி. ஏழுமலை, ராசிபுரம் (தனி) – டாக்டர் எஸ்டி பிரேம்குமார், மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார், உதகை – போஜ ராஜன், அவினாசி (தனி) எல். முருகன், திருப்பூர் தெற்கு தங்கராஜ், கோவை வடக்கு-வானதி சீனிவாசன், திருவாரூர் – கோவி சந்துர், தஞ்சை எம். முருகானந்தம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கந்தர்வக்கோட்டை உதயகுமார், புதுக்கோட்டை ராமச்சந்திரன், அறந்தாங்கி-கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர் – கே.சி. திருமாறன், மானாமதுரை – பால கணபதி, மதுரை தெற்கு -ராம சீனிவாசன், சாத்தூர் – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் – கே. நாகேந்திரன், திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி) -ஆனந்தன் ஐயாசாமி, ராதாபுரம் – பாலகிருஷ்ணன், நாகர்கோயில் எம்.ஆர். காந்தி, கொளச்சல் டி.சிவக்குமார், பத்மநாபபுரம் – பி. ரமேஷ், விளவங்கோடு – எஸ். விஜயதாரணி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version