Home அரசியல் “உங்க வீட்டம்மாவை பற்றி பேசும்போது கேட்டீங்களா?” – விஜயிடம் திமுக சரமாரி கேள்வி! – Kumudam

“உங்க வீட்டம்மாவை பற்றி பேசும்போது கேட்டீங்களா?” – விஜயிடம் திமுக சரமாரி கேள்வி! – Kumudam

0



தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் நேற்று (25.09.2026) பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

பிரசாரத்தில் பேசிய விஜய், “ஜெயலலிதாவையே தவறாக விமர்சித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க அவர்கள் திட்டமிட்டபோதே அவர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. தவெகவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பெண்களை இழிவாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசுபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தக்க பதிலடியாக அமையும்” என்று கூறினார்.

தொடர்ந்து, வீரமணி வழக்கையும் தனது பேச்சில் குறிப்பிட்ட விஜய், பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், பெண்களை திமுக தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

“என்னுடைய அம்மாவையும் இழிவாகப் பேசுகிறார்கள்” என்றும் விஜய் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுகள் மட்டுமே தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பெண்கள் தொடர்பாக திமுகவினரிடம் இருந்து இழிவான பேச்சுகளே வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விஜயின் இந்த விமர்சனங்களுக்கு திமுக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசுவதற்கு முன்பு, அவரது கட்சியினர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும் என திமுக தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவரது மனைவி குறித்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அவதூறாகப் பேசியபோது அதற்கு எதிராக அவர் குரல் கொடுத்தாரா என்றும் திமுக தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“பாலியல் குற்றச்சாட்டுகளில் உங்கள் கட்சியினர்தான் அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல் பேசுகிறீர்களே விஜய் சார். உங்கள் மீது வழக்குப் போட்டபோது, உங்கள் வீட்டம்மாவை உங்கள் கட்சிக்காரர்கள் அவதூறாகப் பேசினார்கள். அதைத் தட்டிக் கேட்க உங்களால் முடியவில்லை. தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேட்கிறீர்களா?” என திமுக தரப்பினர் விமர்சித்துள்ளனர். மேலும், “எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்டை அப்படியே பேசாமல், யோசித்து பேசுங்கள்” என்றும் விஜயை பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

இதனால், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசார களத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விஜயின் குற்றச்சாட்டும், அதற்கு திமுக அளித்துள்ள பதிலடியும் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version